ஆப்பிள் ஐபோன் 12 பற்றி முக்கிய தகவல்கள் கசிந்தது

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஐபோன் 12 வரிசையில் iPhone 12, iPhone 12 Max, iPhone 12 Pro, மற்றும் iPhone 12 Pro Max என மொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகள் இடம்பெற உள்ளது.

5ஜி ஆதரவு பெற்றதாக வரவுள்ள ஐபோன் 12 வரிசையில் குறிப்பாக குறைந்த விலை மாடல்கள் 6GHz 5G ஆதரவுக்கு குறைவான திறனுடன் விளங்கும். அதேநேரத்தில் உயர் ரக ஐபோன் 12ல் mmWave 5G ஆதரவு ஆன்ட்டெனா பொருத்தப்பட்டிருக்கும். நடப்பு ஜூன் மாத இறுதிக்குள் அனைத்து விதமான சோதனைகளும் நிறைவுறும், வரும் ஜூலை மாதத்தில் உற்பத்தி துவ்கும் என டிஜி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐபோன் 12 நுட்ப விபரங்கள்

அலுமினியம் பாடி கொண்டு தயாரிகப்பட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மேக்ஸ் மாடல்கள் குறைவான விலையில் அமையலாம்.

தொடக்க நிலை ஆப்பிள் ஐபோன் 12 மொபைலில் 5.4 அங்குல BOE OLED சூப்பர் ரெட்டினா டிஸ்பிளேவினை பெற்று டூயல் கேமரா கொண்டு புதிய A14 சிப்செட் உடன் 4ஜிபி ரேம் பெற்ற 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என இருவிதமான சேமிப்பினை பெறக்கூடும்.

ஆப்பிள் ஐபோன் 12 தோராயமாக $649 (ரூ. 49,009) ஆரம்ப விலையில் அமையலாம்.

ஐபோன் 12 மேக்ஸ் நுட்ப விபரங்கள்

ஆப்பிள் ஐபோன் 12 மேக்ஸ் அலுமினியம் பாடி கொண்ட மொபைலில் 6.1 அங்குல BOE OLED சூப்பர் ரெட்டினா டிஸ்பிளேவினை பெற்று டூயல் கேமரா கொண்டு புதிய A14 சிப்செட் உடன் 4ஜிபி ரேம் பெற்ற 128 ஜிபி மற்றும் 256 ஜிபி என இருவிதமான சேமிப்பினை பெறக்கூடும்.

ஆப்பிள் ஐபோன் 12 மேக்ஸ் தோராயமாக $749 (ரூ. 56,560) ஆரம்ப விலையில் அமையலாம்.

ஐபோன் 12 புரோ நுட்ப விபரங்கள்

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடி கொண்டு தயாரிக்கப்பட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற ஐபோன் 12 புரோ மாடலில் 6.1 அங்குல சாம்சங் OLED சூப்பர் ரெட்டினா XDR திரையில் 10 பிட் கலர் டெப்த் பெற்று 6 ஜிபி ரேம் உடன் A14 சிப்செட் பெற்ற 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மூன்று விதமான சேமிப்பினை பெறக்கூடும். இந்த மொபைலில் டிரிப்ள் கேமரா செட்டப் பெற்று கூடுதலாக LiDAR சென்சார் ஆதரவு கொண்டதாக அமைந்திருக்கும்.

ஆப்பிள் ஐபோன் 12 புரோ தோராயமாக $999 (ரூ. 75,439) ஆரம்ப விலையில் அமையலாம்.

ஐபோன் 12 புரோ மேக்ஸ் நுட்ப விபரங்கள்

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடி கொண்டு தயாரிக்கப்பட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற ஐபோன் 12 புரோ மேக்ஸ் மாடலில் 6.7 அங்குல சாம்சங் OLED சூப்பர் ரெட்டினா XDR திரையில் 10 பிட் கலர் டெப்த் பெற்று 6 ஜிபி ரேம் உடன் A14 சிப்செட் பெற்ற 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மூன்று விதமான சேமிப்பினை பெறக்கூடும். இந்த மொபைலில் டிரிப்ள் கேமரா செட்டப் பெற்று கூடுதலாக LiDAR சென்சார் ஆதரவு கொண்டதாக அமைந்திருக்கும்.

ஆப்பிள் ஐபோன் 12 புரோ மேக்ஸ் தோராயமாக $1,099 (ரூ. 82,990) ஆரம்ப விலையில் அமையலாம்.