ஆப்பிள் ஐபோன் 12 புரோ, ஐபோன் 12 புரோ மேக்ஸ் மொபைல் விலை மற்றும் சிறப்புகள்

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஐபோன் 12 புரோ மற்றும் ஐபோன் 12 புரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் மேக்ஸேஃப் வயர்லெஸ் சார்ஜிங், 5ஜி ஆதரவுடன் உள்ளிட்டவை 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி வரை வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 12 புரோ

உயர் ரக ஆப்பிள் ஐபோன் 12 வரிசையில் இடம்பெற்றுள்ள ஐபோன் 12 புரோவில் 6.1 அங்குல 2532×1170 பிக்சல் தீர்மானத்துடன் OLED 460ppi சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, 1200 நைட்ஸ் பிரகாசம், பீங்கான் கேடயம் பாதுகாப்பிற்கு சேர்க்கப்பட்டுள்ளது. 64 பிட் கட்டுமானத்தை பெற்ற குவாட் கோர் கிராபிக்ஸ் கொண்ட 6 கோர் ஏ-14 பயோனிக் 5 என்எம் சிப்செட் பெற்றுள்ளது.

கேமரா ஆப்ஷனை பொறுத்தவரை, ஐபோன் 12 புரோவில் டிரிப்ள் கேமராவை கொண்டு  பிரைமரி சென்சார் 12 எம்பி கேமரா உடன் 12 எம்பி அல்ட்ரா வைட் ஏங்கிள் சென்சார் மற்றும் 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் இடம்பெற்றுள்ளது.  இந்த கேமராக்களில் 4K வீடியோ பதிவு, 60 fps, ஸ்லோ – மோ 1080p மற்றும் 240 fps பதிவினை மேற்கொள்ளலாம்.

செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 12 எம்பி சென்சார் இடம்பெற்றுள்ளது. இந்த கேமராவிலும் 4K வீடியோ பதிவு, 60 fps, ஸ்லோ – யூ 1080p மற்றும் 240 fps பதிவினை மேற்கொள்ளலாம்.

ஆப்பிள் ஐபோன் 12 புரோ மேக்ஸ்

ஐபோன் 12 புரோ மேக்ஸ் 6.7 அங்குல 2532×1170 பிக்சல் தீர்மானத்துடன் OLED 2778×1284ppi சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, 1200 நைட்ஸ் பிரகாசம், பீங்கான் கேடயம் பாதுகாப்பிற்கு சேர்க்கப்பட்டுள்ளது. 64 பிட் கட்டுமானத்தை பெற்ற குவாட் கோர் கிராபிக்ஸ் கொண்ட 6 கோர் ஏ-14 பயோனிக் 5 என்எம் சிப்செட் பெற்றுள்ளது.

கேமரா ஆப்ஷனை பொறுத்தவரை, ஐபோன் 12 புரோவில் டிரிப்ள் கேமராவை கொண்டு  பிரைமரி சென்சார் 12 எம்பி கேமரா உடன் 12 எம்பி அல்ட்ரா வைட் ஏங்கிள் சென்சார் மற்றும் 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் இடம்பெற்றுள்ளது.  இந்த கேமராக்களில் 4K வீடியோ பதிவு, 60 fps, ஸ்லோ – மோ 1080p மற்றும் 240 fps பதிவினை மேற்கொள்ளலாம்.

செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 12 எம்பி சென்சார் இடம்பெற்றுள்ளது. இந்த கேமராவிலும் 4K வீடியோ பதிவு, 60 fps, ஸ்லோ – யூ 1080p மற்றும் 240 fps பதிவினை மேற்கொள்ளலாம்.

ஆப்பிள் ஐபோன் 12 புரோ (iphone 12 pro) விலை விபரம் ?

சர்வதேச அளவில் 5ஜி சேவையை ஆதரிக்கும் திறனுடன் வந்துள்ள ஆப்பிள் 12 புரோ மாடலின் 128 ஜிபி விலை ரூ. 1,19,900, 256 ஜிபி சேமிப்பு பெற்ற மாடல் விலை ரூ.1,29,900 மற்றும் டாப் 256 ஜிபி மாடல் விலை ரூ.1,49,900 ஆகும்.

ஆப்பிள் ஐபோன் 12 புரோ மேக்ஸ் (iphone 12 pro max) விலை எவ்வளவு ?

பரீமியம் ரக ஐபோன் 12 புரோ மேக்ஸ் 128 ஜிபி விலை ரூ.1,29,900 முதல் துவங்கி 256 ஜிபி மாடல் விலை ரூ.1,39,900 மற்றும் 512 ஜிபி வேரியண்ட் விலை ரூ.1.59,900

ஆப்பிள் ஐபோன் 12 புரோ, ஐபோன் 12 புரோ மேக்ஸ் மொபைல் விலை மற்றும் சிறப்புகள்

மற்ற அம்சங்கள்

பொதுவாக இரு மாடல்களும் Magsafe வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்துடன், 5ஜி ஆதரவுடன் அதிகபட்சமாக 4Gbps இணைய வேகத்தை பெற்றுள்ளது. ஆப்பிள் ஐபோன் 12 புரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 12  புரோ கோல்டு, கிராபைட், சில்வர் மற்றும் நீலம் வண்ணங்களில் வருகின்றது.

ஐபோன் 12 புரோ அக்டோபர் 30 ஆம் தேதி முதல் இந்தியாவில் ஆப்பிள் அங்கீகரிக்கப்பட்ட மறு விற்பனையாளர்கள் மூலமாகவும், ஐபோன் 12 புரோ மேக்ஸ் நவம்பர் 13 முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

web title : Apple iPhone 12 pro and iPhone 12 pro max launched in India: Here’s all you need to know