ஆப்பிள் ரெட் ஐபோன் 8 & ஐபோன் 8 பிளஸ் மொபைல்கள் வெளியானது

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக விளங்கும் ஆப்பிள் நிறுவனம், எய்ட்ஸ் மற்றும் ஹெச்ஐவி நோய்களுக்கு எதிராக போராடி வரும் ரெட் அமைப்புடன் இணைந்து ஆப்பிள் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் கருவிகளை சிவப்பு நிறத்தில் வெளியிட்டுள்ளது. இந்த மொபைல் போன் மூலம் கிடைக்கப் பெறும் வருவாய் ஹெச்ஐவி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

ஆப்பிள் ரெட் ஐபோன் 8 & ஐபோன் 8 பிளஸ்

ஆப்பிள் ரெட் ஐபோன் 8 & ஐபோன் 8 பிளஸ் மொபைல்கள் வெளியானது

ஆப்பிள் மொபைல் தயாரிப்பாளர் தொடர்ந்து ரெட் அமைப்புடன் இணைந்து எச்ஐவி நோய்க்கு எதிரான நடவடிக்களைகளை மேற்கொண்டு வருகின்றது. சர்வதேச அளவில் செயற்பட்டு வரும் ரெட் அமைப்பு எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோதனை ஆலோசனை, சிகிச்சைகள் மற்றும் தடுப்பு திட்டங்கள் ஆகியவற்றுடன் தாய்மார்களிடமிருந்து வைரஸ்கள் தங்கள் குழந்தைகளுக்கு பரவாமல் தடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருவது குறிப்பிடதக்கதாகும்.

கடந்த முறை ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் கருவிகளில் சிவப்பு நிறம் வெளியிட்டிருந்ததை தொடர்ந்து , வெள்ளை நிற பேனலை முன்புறத்தில் கொண்டிருந்தது. தற்போது ஐபோன் 8 வரிசை கருவியில் பிளாக் பேனல் வழங்கப்பட்டு ரெட் எடிசன் கிடைக்க தொடங்கியுள்ளது.

ஆப்பிள் ரெட் ஐபோன் 8 & ஐபோன் 8 பிளஸ் மொபைல்கள் வெளியானது

இந்தியாவில் ஐபோன் 8 ரெட் 64ஜிபி வேரியன்ட் ரூ. 67,940 விலையிலும் , ஐபோன் 8 ரெட் 256ஜிபி வேரியன்ட் ரூ. 81,500 ஆகும். மேலும் ஐபோன் 8 பிளஸ் 256 ஜிபி வேரியன்ட் ரூ. 91,110 ஆகும்.

முதற்கட்டமாக ஏப்ரல் 10 (இன்று) முதல் ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், ஜப்பான், நியூசிலாந்து, சிங்கப்பூர், தென் கொரியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் முன்பதிவு தொடங்கப்பட்டு ஏப்ரல் 13 முதல் டெலிவரி தொடங்கப்பட உள்ளது.

இந்த மாதம் இறுதியில்  பிரேசில், டென்மார்க், அயர்லாந்து, இத்தாலி, மலேசியா, மெக்ஸிகோ, நெதர்லாந்து, நோர்வே, ரஷ்யா, சவுதி அரேபியா, ஸ்பெயின், சுவீடன், ஸ்விட்சர்லாந்து, தைவான், தாய்லாந்து, அரபு நாடுகளில் கிடைக்க உள்ளது. பிற நாடுகளான சிலி, கொலம்பியா, இந்தியா, இஸ்ரேல், துருக்கி மற்றும் பிற நாடுகளில் மே மாதத்தில் கிடைக்கும் என ஆப்பிள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் X கருவியில் ரெட் மாடல் வெளியிடப்படவில்லை என்றாலும் ரெட் லெதர் ஃபோலியா கேஸ் ஒன்று ரூ.7900 விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆப்பிள் ரெட் ஐபோன் 8 & ஐபோன் 8 பிளஸ் மொபைல்கள் வெளியானது