உலகின் மிகவும் மதிப்புமிக்க ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வரிசையில் புதிதாக ஆப்பிள் ஐபோன் 8, ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஆப்பிள் ஐபோன் X ஆகிய மூன்று ஸ்மார்ட்போன் மாடல்ளும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ்
புதிய ஆப்பிள் பார்க் 135 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள வளாகத்தில் 20,000 பணியாளர்களுக்கு ஏற்ப வசதிகள் கொண்டதாக உள்ள இந்த இடத்தில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் ஆப்பிள் ஐபோன் 8, ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஆப்பிள் ஐபோன் X ஆகியவற்றுடன் ஆப்பிள் டிவி (2017) , ஆப்பிள் வாட்ச், உள்ளிட்ட பல்வேறு கருவிகள் வெளியிடப்பட்டுள்ளது.
டிசைன் & டிஸ்பிளே
சில்வர், கோல்டு மற்றும் ஸ்பேஸ் கிரே ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்க உள்ள ஐபோன் 8 மற்றும் 8 பிளஸ் கருவிகள் உயர்தர ரெட்டினா ஹெச்டி திரையுடன் 4.7 அங்குல (ஐபோன் 8) மற்றும் 5.5 அங்குல (ஐபோன் 8 பிளஸ்) திரையுடன் கிளாஸ் மற்றும் அலுமினியம் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது.
பிராசஸர்
முந்தைய பிராசஸர் சிப்செட் A10 -யை விட 70 சதவீத வேகம் பெற்ற புதிய A11 பயோனிக் பிராசஸருடன் ஆப்பிள் iPhone 8, மற்றும் ஆப்பிள் iPhone 8 Plus இயக்கப்படுவதுடன் 30 சதவீத கூடுதல் திறன் பெற்றதாக உள்ளது. மிகவும் திறன் வாய்ந்த கேம்கள் மற்றும் ஏஆர் ஆப்களை மிக எளிமையாக அனுகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
64GB மற்றும் 256GB ஆகிய இரு உள்ளடக்க மெமரி வசதியுடன் இந்த சிறப்பு எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கேமரா
ஆப்பிள் ஐபோன் 8 கருவியில் பின்புறத்தில் 12 மெகபிக்சல் கேமரா வழங்கப்பட்டு ƒ/1.8 5x டிஜிட்டல் ஜூம் ஆகியவற்றை பெற்றுள்ளது. முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு ஏற்றவற்றுடன் 1080p வீடியோ பதிவு செய்யும் வகையில் அமைந்துள்ள 7 மெகாபிக்சல் சென்சார் கேமரா உள்ளது.
ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் கருவியில் பின்புறத்தில் இரண்டு 12 மெகபிக்சல் கேமரா வழங்கப்பட்டு ƒ/1.8, போர்ட்ராய்ட் மோட், 10x டிஜிட்டல் ஜூம் ஆகியவற்றை பெற்றுள்ளது. முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு ஏற்றவற்றுடன் 1080p வீடியோ பதிவு செய்யும் வகையில் அமைந்துள்ள 7 மெகாபிக்சல் சென்சார் கேமரா உள்ளது.
பேட்டரி
முந்தைய ஐபோன் 7 மாடலில் உள்ள அதே திறனுடன் கூடிய பேட்டரி பெற்று 21 மணி நேர டாக்டைம் (14 மணிநேரம் ஐபோன் 8) மற்றும் 12 மணி இணைய பயன்பாடு பெற்ற,இதில் 30 நிமிடத்தில் 50 சதவீத சார்ஜாகின்ற விரைவு சார்ஜர் வசதியுடன் Qi சார்ஜர் வாயிலாக வயர்லெஸ் வசதியை பெறலாம்.
மற்றவை
ஆப்பிள் ஐஓஎஸ் 11 கொண்டு இயக்கப்படுகின்ற இந்த மொபைலில் டச் ஐடி கொண்டு திறக்கும் வகையிலான பாதுகாப்பு வசதி, 3டி டச், சிறி ஆகிய பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.
ஆப்பிள் ஐபோன் 8 விலை
Apple iPhone 8 64GB -ரூ.64,000
Apple iPhone 8 256GB – ரூ.77,000
ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் விலை
Apple iPhone 8 Plus 64GB – ரூ.73,000
Apple iPhone 8 Plus 256GB – ரூ.86,000
இந்தியா வருகை
ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் செப்டம்பர் 15 முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் இந்தியாவில் செப்டம்பர் 29ந் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கலாம்.