ஆப்பிள் ஐபோன்கள் விலை ரூ.3700 வரை உயர்ந்தது - முழு பட்டியல்மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி செய்யப்படுகின்ற மொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் இறக்குமதி வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளதால், ஆப்பிள் ஐபோன் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் விலை பட்டியல்

ஆப்பிள் ஐபோன்கள் விலை ரூ.3700 வரை உயர்ந்தது - முழு பட்டியல்

உலகின் பிரபலமான ஆப்பிள் பிராண்டு ஐபோன்கள் இந்தியாவில் 88 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு இறக்குமதி செய்யப்படும் மொபைல்களுக்கு 10 சதவீதம் முதல் 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

கடந்த மே மாதம் முதல் ஆப்பிள் ஐபோன் SE மொபைல்கள் பெங்களூருவில் அமைந்துள்ள ஆலையில் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதனால் அதனை தவிரத்து மற்ற மாடல்களில் விலை ரூ.1280 முதல் அதிகபட்சமாக ரூ.3720 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் X (10) ஸ்மார்ட்போன் விலை ரூ. 3720 உயர்த்தப்பட்டு, இனி ரூ.1,05, 720 என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் ஐபோன் 8 64ஜிபி கருவி ஆரம்ப விலை ரூ.66,120 மற்றும் ஐபோன் 8 பிளஸ் 64ஜிபி ஆரம்ப விலை ரூ.75,420 என நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது.

முழுமையான விலை பட்டியலை கீழே உள்ள அட்டவனை படத்தில் காணலாம்.

ஆப்பிள் ஐபோன்கள் விலை ரூ.3700 வரை உயர்ந்தது - முழு பட்டியல்

விலை பட்டியல் உதவி – கேட்ஜெட்ஸ் 360

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here