பட்ஜெட் விலை மாடலான ஆப்பிள் நிறுவனத்தின் 2020 ஐபோன் எஸ்.இ ஸ்மார்ட்போன் விற்பனை மே 20 ஆம் தேதி பகல் 12.00 மணிக்கு ஃபிளிப்கார்ட் இ-காமர்ஸ் தளத்தில் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவன அங்கீகரிக்கப்பட்ட டீலர்களும் விற்பனையை துவங்க உள்ளனர்.
புதிய ஐபோன் எஸ்.இ மொபைலில் மெட்டல் பாடி வழங்கப்பட்டு 4.7 அங்குல ரெட்டினா டிஸ்பிளே 1334×750 பிக்சல் பெற்று கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு என மூன்று விதமான நிறங்களை பெறுகின்றது. பின்புறத்தில் நேர்த்தியான முறையில் லோகோ வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு சார்ந்த டச் ஐடி அம்சமும் இணைக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 11, ஐபோன் 11 புரோ உள்ளிட்ட மாடல்களில் பயன்படுத்தப்ட்டுள்ள மிகவும் சக்திவாய்ந்த A13 பயோனிக் சிப்செட் மூலம் ஐஓஎஸ் 13 இயங்குதளத்தால் இயக்கப்படுகின்றது. 64GB, 128GB மற்றும் 256GB என மூன்று விதமான திறன்களில் கிடைக்கின்றது.
ஒற்றை கேமரா ஆப்ஷனை பெறுகின்ற ஐபோன் எஸ்இ மாடலில் பிரைமரி ஆப்ஷனில் 12 மெகாபிக்சல் சென்சார் இணைக்கப்பட்டு f/1.8 உடன் அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ் கொண்டு மிக நவீனத்துமான வகையில் படமாக்கும் நுட்பத்தை கொண்டுள்ளது. இந்த கேமராவின் மூலம் 4K வீடியோவினை 24 fps, 30 fps மற்றும் 60 fps முறையில் பதிவு செய்ய இயலும்.
செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 7 மெகாபிக்சல் சென்சாருடன் f/2.2 துளை பெற்றுள்ளது.
ஆப்பிள் ஐபோன் எஸ்இ ஆரம்ப விலை ரூ.42,500 (64GB)
ஆப்பிள் ஐபோன் எஸ்இ 128GB மாடல் ரூ.47,800
ஆப்பிள் ஐபோன் எஸ்இ 256GB மாடல் ரூ.58,300
சிறப்பு அறிமுக சலுகையாக ஹெச்.டி.எஃப்.சி கார்டு கொண்டு வாங்குவோருக்கு ரூ.3,600 வரை உடனடி விலை சலுகை வழங்கப்பட உள்ளது.