ஐபோன் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு ரூ.89,000 ஆரம்ப விலையில் ஆப்பிள் ஐபோன் X விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 27 முதல் முன்பதிவு தொடங்கப்பட்டு , நவம்பர் 3ந் தேதி முதல் டெலிவரி செய்யப்பட உள்ளது.

ஆப்பிள் ஐபோன் X

இந்த ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் ஐபோன் 8 , ஐபோன் 8 பிளஸ், மற்றும் ஐபோன் X ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்களுடன் ஆப்பிள் வாட்ச் மற்றும் ஆப்பிள் டிவி ஆகியவற்றை ஆப்பிள் வளாகத்தில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

iPhone X’ (Pronounced  iPhone 10) அதாவது ரோமண் எண்களின் அடிப்படையில் இந்த மாடலுக்கு பெயரிடப்பட்டுள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே நிறங்களுடன் அகலமான 5.8 அங்குல சூப்பர் ரெட்டினா ஹெச்டி திரையில் OLED பேனலை கொண்டதாக ஹோம் பட்டன் போன்றவை இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது. சாதாரணமாக ஸ்வைப் செய்தால் திரை தோன்றும் வகையில் அமைந்துள்ளது.

பிராசெஸர் & ரேம்

முந்தைய பிராசஸர் சிப்செட் A10 -யை விட 70 சதவீத வேகம் பெற்ற புதிய A11 பயோனிக் பிராசஸருடன் ஆப்பிள் iPhone X இயக்கப்படுவதுடன் 30 சதவீத கூடுதல் திறன் பெற்றதாக உள்ளது. மிகவும் திறன் வாய்ந்த கேம்கள் மற்றும் ஏஆர் ஆப்களை மிக எளிமையாக அனுகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

64GB மற்றும் 256GB ஆகிய இரு உள்ளடக்க மெமரி வசதியுடன் இந்த சிறப்பு எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கேமரா துறை

மிகத்தெளிவான உயர்ரக ஹெச்டி படங்கள் மற்றும் வீடியோ பதிவு செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ள இரட்டை கேமரா 12 மெகாபிக்சல் சென்சார் பெற்றதாக ஒன்று வையட் ஏங்கிள் மற்றும் டெலிபோட்டோ லென்ஸ் ஆகியவற்றை கொண்ட குவாட் எல்இடி ஃபிளாஷ் பெற்றதாக உள்ளது.

ஆட்டோஃபோகஸ், 10x ஆப்படிக்கல் ஜூம், பாடி மற்றும் ஃபேஸ் டிடெக்ஷன் 4K, 1080p HD வீடியோ பதிவு செய்ய என பல்வேறு வசதிகளை கொண்ட்டுள்ளது.

முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 7 மெகாபிக்சல் சென்சார் கேமராவில் போர்ட்ராய்ட் மோட் மற்றும் ƒ/2.2 வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

ஐபோன் X மாடலில் இடம்பெற்றுள்ள பேட்டரி முந்தைய ஐபோன் 7 மாடலை விட 2 மணி நேர கூடுதலான திறனுடன் 21 மணி நேர டாக்டைம் மற்றும் 12 மணி இணைய பயன்பாடு பெற்ற,இதில் 30 நிமிடத்தில் 50 சதவீத சார்ஜாகின்ற விரைவு சார்ஜர் வசதியுடன் Qi  சார்ஜர் வாயிலாக வயர்லெஸ் வசதியை பெறலாம்.

சிறப்பு வசதிகள்

ஆப்பிள் ஐஓஎஸ் 11 கொண்டு இயக்கப்படுகின்ற இந்த மொபைலில் ஃபேஸ் ஐடி கொண்டு திறக்கும் வகையிலான பாதுகாப்பு வசதி, 3டி டச், சிறி ஆகிய பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் X விலை

இந்திய சந்தையில் ஆப்பிள் ஐபோன் X முன்பதிவு அக்டோபர் 27ந் தேதி தொடங்கப்படுகின்ற நிலையில் நவம்பர் 3ந் தேதி முதல் இந்தியாவில் டெலிவரி தொடங்கப்பட உள்ளது.

Apple iPhone X 64GB – ரூ.89,000

Apple iPhone X 256GB – ரூ.1,02,000