விற்பனையில் சாதனை படைக்கும் ஆப்பிள் ஐபோன் X – Q1 2018

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வரிசை மொபைலின் 10வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளியான ஆப்பிள் ஐபோன் X இந்த வருடத்தின் முதல் காலாண்டின் முடிவில் 1.6 கோடி மொபைல்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

ஆப்பிள் ஐபோன் X

உலகின் மிகவும் மதிப்புமிக்க பிராண்டாக விளங்கும் ஆப்பிள் நிறுவனத்தின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் மாடலாக விளங்கும் ஆப்பிள் ஐபோன் X மாடல் இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களின் விற்பனை முடிவில் மற்ற மொபைல் போன்களை பின்னுக்கு தள்ளி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக Strategy Analytics விற்பனை ஆய்வறிக்கை வாயிலாக தகவல் வெளியாகியுள்ளது.

விற்பனை நிலவரப்படி ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மூன்று மாதங்களில் மொத்தமாக சர்வதேச அளவில் சுமார் 52 மில்லியன் அதாவது 5.2 கோடி கோடி மொபைல்களை விற்பனை செய்துள்ளது. இவற்றில் ஆப்பிள் 7 மொபைல் உள்ளிட்ட  மாடல்கள் வாரியான விபரம் பின் வருமாறு ;-

ஆப்பிள் ஐபோன் எக்ஸ் – 16 மில்லியன்

ஆப்பிள் ஐபோன் 8 – 12.5 மில்லியன்

ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் – 8.3 மில்லியன்

ஆப்பிள் ஐபோன் 7 – 5.6 மில்லியன்

சியோமி ரெட்மி 5A – 5.4 மில்லியன்

சாம்சங் கேலக்ஸி எஸ் 9 – 5.3 மில்லியன்

கடந்த மாரச் மாத இறுதியில் விற்பனைக்கு வெளியான கேலக்ஸி எஸ்9 மொபைல் போன் பட்டியிலில் 6வது இடத்தை பெற்று அசத்தியுள்ளது. ஆனால் முந்தைய வருடத்தின் முதல் காலாண்டில் மொத்தமாக 353.8 மில்லியன் மொபைல் டெலிவரி செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 345.4 மில்லியன் மொபைல் ஆக குறைந்துள்ளது.

Recommended For You