புதிய மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாக கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி தற்போது 3 புதிய மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன. எக்ஸ். எஸ்- விட, மேக்ஸ் சற்று அளவில் பெரியது. எக்ஸ்.எஸ். 5.8 இன்ச் அளவுள்ளதாகவும், மேக்ஸ் 6.5 இன்ச் அளவுள்ளதாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. புதிய ஃபோன்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி ஆப்பிள் பார்க்கின் ஸடீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடைபெற்றது.

இரட்டை சிம்களை பயன்படுத்தும் வசதி இந்த புதிய மாடல்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜிகாபைட்-கிளாஸ் எல்.டி.இ. வேகத்தில் புதிய மாடல்கள் செயல்படும். அதுமட்டுமின்றி ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சையும் ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது.

உலகிலேயே நம்பர் ஒன் ஸ்மார்ட் ஃபோன் இதுதான் என்று ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக் கூறியுள்ளார். புதிய மாடல் ஐ ஃபோன்கள் திருப்திகரமாக உள்ளதென்று 98 சதவீத வாடிக்கையாளர்கள் கமென்ட் செய்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் iPhone XS – -ன் விலை, 64 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட ஃபோன் ரூ. 71,800- ஆகவும். 256 ஜிபி வகை ரூ. 82,600- ஆகவும், 512 ஜி.பி. வகை ரூ. 97,000- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


iPhone XS Max – ன் விலை, 64 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட ஃபோன் ரூ. 79,000- ஆகவும். 256 ஜிபி வகை ரூ. 89,800- ஆகவும், 512 ஜி.பி. வகை ரூ. 1,04,200- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாடல்களையும் செப்டம்பர் 14-ந்தேதியில் இருந்து ஆர்டர் செய்து கொள்ளலாம். 21-ம் தேதியில் இருந்து ஷிப்பிங் தொடங்கி விடும். கிரே, சில்வர் நிறங்களுடன் தங்க நிறத்திலும் இந்த மாடல் ஃபோன்கள் சந்தைக்கு வந்துள்ளன.

இந்தியாவில் விலை நிலவரம்

Internal StorageiPhone XS Price in IndiaiPhone XS Max Price in India
64GBRs. 99,900 ($999 in the USRs. 1,09,900 ($1,099 in the US
256GBRs. 1,14,900 ($1,149 in the US)Rs. 1,24,900 ($1,249 in the US)
512GBRs. 1,34,900 ($1,349 in the US)Rs. 1,44,900 ($1,449 in the US)