உலகின் பிரசத்தி பெற்ற டெக் உலகின் ஜாம்பவான் ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர WWDC 2018 அரங்கில் புதிய இயங்குதளமாக ஆப்பிள் iOS 12 அறிமுகம் செய்யப்பட்டு முந்தைய பதிப்புடன் கூடுதலான வசதிகள், மேம்படுத்தப்பட்ட செயல்திறன் மற்றும் நவீன அம்சங்களை கொண்டுள்ளது.

ஆப்பிள் iOS 12

 

வருடாந்திரம் நடைபெறுகின்ற WWDC 2018 மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆப்பிள் iOS 12 முந்தைய ஐஓஎஸ் 11 பதிப்பை விட முற்றிலும் மேம்படுத்தப்பட்டதாக பல்வேறு வசதிகளை கொண்டதாக வெளியாகியுள்ளது. குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் செயல்திறன் சார்ந்த அம்சத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாக வந்துள்ளது.

ஆப்பிள் நிறுவன மென்பொருள் பிரிவின் மூத்த தலைவர் Craig Federighi அறிமுகத்தின் போது மொபைல் பெர்ஃபாமென்ஸ் குறித்து கூறுகையில், ஐஓஎஸ் 11 இயங்குதளத்தை காட்டிலும் ஐஓஎஸ் 12 இயங்குதளம் மிக வேகமாக அதாவது முந்நைய பதிப்பை விட 50 சதவீத கூடுதல் வேகத்தை கொண்டதாக விளங்குகின்றது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கருவிகள் மட்டுமல்ல ஆப்பிள் ஐபோன் 6 பிளஸ் மொபைலுக்கும் ஐஓஎஸ் 12 மேம்பாடு வழங்கப்படுவதுடன், இதன் வாயிலாக தற்போது இந்த மொபைல்கள் இயங்குவதடன் கூடுதலாக 40 சதவீத வேகத்தை பெற்றிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

AR மற்றும் ARKit 2.0

ஆப்பிள் ஐஓஎஸ் 12 பதிப்பில் மிக முக்கியமானதாக augmented reality (AR) எனப்படுகின்ற அம்சத்துக்கு மிகிந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நுட்பத்தின் வாயிலாக முப்பரிமாணம் வாயிலாக உணர்வதற்கு, ஃபேசியல் லாக் சிறப்பாக இயங்க வழி வகுக்கின்றது.

புதிதாக ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள USDZ ஃபைல் ஃபார்மெட் வழியாக அடோப், ஆட்டோடெஸ்க்ட் உள்ளிட்ட ஃபைல்களை இலகுவாக கையாளுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மெமோஜி

அனிமோஜியை தொடர்ந்து ஆப்பிள் ஐஓஎஸ் 12 பெற்றுள்ள மெமோஜி எனப்படும் 3D எமோஜி மாடல்கள் சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்9 மாடலில் இடம்பெற்றிருந்த AR எமோஜிக்கு சவாலாக விளங்குகின்றது. ஆப்பிள் இந்த வசதியை மேசஞ், ஃபேஸ்டைம் ஆப் மற்றும் கேமரா ஆப் வாயிலாக இணைத்துள்ளது.

சிறி ஷாட்கட்ஸ்

பல்வேறு புதி ஷாட்கட்களை பெற்றுள்ள சிறி மிக வேகமாக தங்களது தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேரம், காலண்டர் குறிப்புகள் மற்றும் இருப்பிடம் சார்ந்த நிகழ்வுகளை பெற இயலும்.

போட்டோஸ்

ஐஓஎஸ் 12 செயலில் போட்டோஸ் ஆப் கூடுதலான வசதிகளை வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு படங்க்களை இலகுவாக ஒருங்கிணைக்க பிரிவுகளை வித்தியாசப்படுத்த வழி வகுக்கும் வகையில் தேடுதல் வசதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.

க்ரூப் ஃபேஸ்டைம்

32 நபர்களை ஒரே நேரத்தில் இணைக்கும் வகையில் ஆட்டியோ அல்லது வீடியோ கால்க்களை வழங்கும் அம்சத்தை ஐஓஎஸ் 12 வழியாக ஆப்பிள் நிறுவன வீடியோ கால் செயலியாக விளங்கும் ஃபேஸ்டைமில் வழங்கப்பட்டுள்ளது.

கார் ப்ளே

முதன்முறையாக ஆப்பிள் கார்ப்ளே செயலில் மூன்றாவது நப்களின் நேவிகேஷன் செயலிகளை பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கூகுள் மேப்ஸ் ஆப்பை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

மேலும் பல்வேறு வசதிகளை பெற்று விளங்குகின்ற ஆப்பிள் iOS 12 இயங்குதளம் ஆப்பிள் கருவிகளுக்கு இந்த மாத இறுதியில் பொது மக்களுக்கு பீட்டா சேவை வழங்ப்பபட உள்ள நிலையில் ஐபோன் 5S மொபைல் உட்பட அதன் பிறகு வெளியான மொபைல்களுக்கு கிடைக்கப் பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.