வரும் செப்டம்பரில் வெளியாகிறது ஆப்பில் ஏர்பவர் சார்ஜிங் பேட்

ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது ஐபோன் 8, ஐபோன் X போன்களை அறிமுகப்படுத்தியது. இந்த போன்கள் அறிமுகம் செய்யும் போதே, ஏர்பவர், புதிய வயர்லெஸ் சார்ஜிங் பேட்களை காட்சிக்கு வைத்திருந்தது. இந்நிலையில், இந்த சார்ஜர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான தகவல்களின் படி, இந்த சார்ஜர், வரும் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிய வந்துள்ளது.

வரும் செப்டம்பரில் வெளியாகிறது ஆப்பில் ஏர்பவர் சார்ஜிங் பேட்

மேலும் அந்த தகவலில், இந்த ஏர்பேட் சார்ஜர்கள், அடுத்த மாதம் முதல் சீனாவில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த சார்ஜரின் விலை சீனாவில் 1000 யுவன் விலையில் விற்பனை செய்யப்படும். இது சராசரியாக 145 டாலராக இருக்கும். இந்த சார்ஜர்கள், 2018 ஐபோன் X2 சீரிஸ்களுடன் விற்பனை வரும் என்று தெரிய வந்துள்ளது.