ஆசுஸ் ஜென்போன் 6

ஃபிளிப் முறையில் டூயல் கேமரா அம்சத்தை கொண்ட ஆசுஸ் 6Z ஸ்மார்ட்போன் ஃபிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. உலகில் முதன்முறையாக ஃபிளிப் முறையில் 48 எம்பி கேமரா சென்சார் உடன் 13 மெகாபிக்சல் பெற்றதாக அமைந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் கொண்ட இந்த போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் உடன் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. அதிகபட்ச திறன் வாய்ந்த 5,000mAh பேட்டரி கொண்டதாக அமைந்திருக்கின்றது.

ஆசுஸ் 6Z

இந்தியாவில் ஜென் மொபைல் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஜென்ஃபோன் அல்லது ஜென் வாரத்தையை பயன்படுத்தக்கூடாது என தொடர்ந்த வழக்கில் உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படி ஜென் என்ற பெயரை இனி ஆசுஸ் பயன்படுத்த இயலாது.

சில வாரங்களுக்கு முன்னதாக சாம்சங் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டிருந்த சாம்சங் கேலக்ஸி ஏ80 மொபைலை போன்றே அமைந்துள்ளது. ஆசுஸ் ஜென்போன் 6 ஸ்மார்ட்போன் 6.4 அங்குல FHD+ திரை 1080×2340 பிக்சல்ஸ் 19.5:9 திரைவிகிதம் மற்றும் 600 நிட்ஸ் அளவிலான ஒளிர்வு கொண்ட பாடிக்கும் ஸ்கிரீனுக்கும் உள்ள விகிதம் 92சதவிகிதமாக உள்ளது.

ஆசுஸ் ஜென்ஃபோன் 6

முன் மற்றும் பின்புறங்களில் ஒரே கேமரா செயல்படுகின்ற ஃபிள்ப் முறையில் எயல்படுகின்ற இந்த கேமரா 48 மெகாபிக்சல் மற்றும் 13 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் லென்ஸ் கொண்டதாக விளங்குகின்றது.

க்விக் சார்ஜ் 4.0 அம்சத்துடன் கூடிய 5,000mAh திறன் பெற்ற மிகப்பெரிய பேட்டரியை கொண்டுள்ளது.  ப்ளூடூத் v5, வை-ஃபை மற்றும் 3.5mm ஆடியோ ஹெட்போன் ஜாக் ஆகியவற்றுடன் யூஎஸ்பி டைப்-C சார்ஜர் போர்ட் பொருத்தப்பட்டுள்ளது.

6GB RAM + 64GB உள் சேமிப்பு பெற்ற ஆசுஸ் 6Z-ன் விலை 499 யூரோ (தோராயமாக 39,100 ரூபாய்), 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட ஆசுஸ் ஜென்போன் 6-ன் விலை 559 யூரோ (தோராயமாக 43,800 ரூபாய்), 8GB ரேம் + 256GB உள் சேமிப்பு அளவு கொண்ட ஆசுஸ் ஜென்ஃபோன் 6-ன் விலை 599 யூரோ (தோராயமாக 47,000 ரூபாய்) . இங்கே வழங்கப்பட்டுள்ள விலை மதிப்பு தோராயமானதாகும்.

ஆசுஸ் 6Z என்ற பெயரில் ஜென்ஃபோன் 6 விற்பனைக்கு அறிமுகமாகிறது

 

ASUS 6Z specifications

 • 6.46-inch ( pixels) Full HD+ NanoEdge IPS LCD 19.5:9 aspect ratio screen with 600 nits brightness, HDR10, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு
 • ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 855 7nm மொபைல் பிளாட்ஃபாரம் (1 x 2.84GHz Kryo 485 + 3 x 2.42GHz Kryo 485 + 4x 1.80GHz Kryo 485) with Adreno 640 GPU
 • 6GB LPDDR4X RAM with 64GB (UFS 2.1) storage, 8GB LPDDR4X RAM with  128GB / 256GB (UFS 2.1) storage, expandable memory up to 1TB with microSD
 • ஆண்ட்ராய்டு 9.0 (Pie) உடன் ZenUI 6
 • இரு சிம் கார்டு (nano + nano + microSD)
 • 48MP ஃபிளிப் கேமரா உடன் டூயல் எல்இடி ஃபிளாஷ், f/1.79 aperture, 1/2″ சோனி IMX586 sensor, 0.8μm pixel size, Laser AF, EIS, 13MP கேமரா with 125-degree அல்ட்ரா வைட் லென்ஸ், f/2.4 aperture
 • கைரேகை சென்சார்
 • அளவுகள்: 159.1 x 75.4 x 9.2 mm; எடை: 190g
 • 3.5mm ஆடியோ ஜாக்,  FM radio,5-magnet stereo speaker, Dual NXP TFA9874 smartamp, dual microphones
 • டூயல் 4G VoLTE, WiFi 802.11 ac (2.4GHz + 5GHz), Bluetooth 5, GPS + GLONASS, USB Type-C
 • 5000mAh பேட்டரி உடன் க்விக் 4.0 ஃபாஸ்ட் சார்ஜிங்