ஏசஸ் ஜென்போன் 3S மேக்ஸ் விலை , நுட்ப விபரம்

ரூ. 14,999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ஏசஸ் ஜென்போன் 3S மேக்ஸ் (ZC521TL) ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனையிலும் கிடைக்க உள்ளது. கருப்பு மற்றும் கோல்டு வண்ணங்களில் மட்டுமே கிடைக்க உள்ளது.

ஏசஸ் ஜென்போன் 3S மேக்ஸ்

பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டதாக விளங்குகின்ற  ஜென்போன் 3S மேக்ஸ் மொபைலில் இடம்பெற்றுள்ள 5000mAh கருவியானது அதிகபட்சமாக இரண்டு நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வெளிப்படுத்தக்க கூடியதாக விளங்குகின்றது. இதில் உள்ள மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால் இதில் உள்ள சார்ஜ் வாயிலாக மற்ற மொபைல்கள் , பவர்பேங்குகளை ரிவர்ஸ் சார்ஜ் செய்யலாம்.

அலுமினியம் மெட்டல் பாடியுடன் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தை அடிப்படையாக 5.2 அங்குல ஹெச்டி திரையுடன் (720p)  2.5D வளைவு கொண்ட கிளாசை பெற்று விளங்குகின்றது.  சென்போன் 3எஸ் ஸ்மார்ட்போனில் மீடியாடெக் 64 பிட் MT6750 ஆக்டோ கோர் SoC (eight Cortex A-53 cores) உடன் 1.5GHz சேர்ந்த 3GB ரேம் பெற்று 32ஜிபி வரையிலான உள்ளடங்கிய சேமிப்பை பெற்று விளங்குகின்றது. மேலும் கூடுதலாக 256 ஜிபி சேமிப்பை மைக்ரோ எஸ்டி கார்டினை பயன்படுத்தி அதிகரிக்கலாம்.

போட்டோகிராபி அம்சங்களை மிக தெளிவாக வெளிப்படுத்தும் நோக்கில் 13 மெகாபிக்சல் கொண்ட பின்புற கேமரா இரட்டை எல்இடி பிளாஷ் , PDAF போன்றவற்றை பெற்றிருப்பதுடன் நைட் மோட் , அழுகுப்படுத்துதல் என பல அம்சங்களை கொண்டுள்ளது.  முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது.

ஹைபிரிட் டூயல் சிம் கார்டு ,வைபை , 4ஜி எல்டிஇ , ஜிபிஎஸ் , கைரேகை ஸ்கேனர் என பல்வேறு விதமான அடிப்படை வசதிகளை கொண்டதாக விளங்கும் ஏசஸ் ஜென்போன் 3S மேக்ஸ் விலை ரூபாய்  14,999 மட்டுமே…

போட்டியாளர்கள் லெனோவா பி2 மற்றும் ரெட்மி நோட் 4 டாப் ரக மாடலாகும்.

Recommended For You