ஆசஸ் ஜென்போன் 4 செல்பி ப்ரோ, ஜென்போன் 4 செல்பி டூயல் கேமரா,ஜென்போன் 4 செல்பி அறிமுகம்ஆசஸ் ஜென்போன் 4 செல்பி ப்ரோ, ஆசஸ் ஜென்போன் 4 செல்பி டூயல் கேமரா மற்றும் ஆசஸ் ஜென்போன் 4 செல்பி ஆகிய மூன்று மொபைல்களும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ஆசஸ் ஜென்போன் 4 சீரிஸ்

இந்திய சந்தையில் ஆசஸ் நிறுவனத்தின் ஜென்போன் 4 செல்பி ப்ரோ ரூ.23,999,  ஜென்போன் 4 செல்பி டூயல் கேமரா ரூ.14,999,ஜென்போன் 4 செல்பி ரூ.9,999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆசுஸ் ஜென்போன் 4 செல்பி ப்ரோ

5.5 அங்குல முழு ஹெச்டி AMOLED திரையுடன் கூடிய 2.5 டி வளைந்த கிளாஸ் பாதுகாப்பு பெற்ற செல்ஃபி ப்ரோ மொபைலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் கொண்டு 4ஜிபி நினைவகம் பெற்றதாக 64ஜிபி உள்ளடக்க சேமிப்புடன், இதனை நீட்டிக்க 256 ஜிபி வரையிலான சேமிப்பு மைக்ரோஎஸ்டி அட்டை ஸ்லாட் பெற்றதாக கிடைக்க உள்ளது.

செல்பி படங்களை உயர்தரத்தில் பெறுவதற்கு இரட்டை கேமரா செட்டப் பெற்ற 24 மெகாபிக்சல் சென்சார் (12MP x 2) எல்இடி ஃபிளாஷ் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 16 மெகாபிக்சல் எல்இடி டூயல் டோன் ஃபிளாஷ் கொண்டதாக வந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட  ZenUI 4.0 இடைமுகத்துடன் 3000mAh பேட்டரி திறன் கொண்டதாக வந்துள்ளது.

ஆசுஸ் ஜென்போன் 4 செல்பி ப்ரோ விலை ரூ.23,999

ஆசஸ் ஜென்போன் 4 செல்பி ப்ரோ, ஜென்போன் 4 செல்பி டூயல் கேமரா,ஜென்போன் 4 செல்பி அறிமுகம்

ஆசுஸ் ஜென்போன் 4 செல்பி டூயல் கேமரா

5.5 அங்குல முழு ஹெச்டி சூப்பர் ஐபிஎஸ் திரையுடன் கூடிய 2.5டி வளைந்த கிளாஸ் பாதுகாப்பு பெற்ற செல்ஃபி ப்ரோ மொபைலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் கொண்டு 4ஜிபி நினைவகம் பெற்றதாக 64ஜிபி உள்ளடக்க சேமிப்புடன், இதனை நீட்டிக்க 256 ஜிபி வரையிலான சேமிப்பு மைக்ரோஎஸ்டி அட்டை ஸ்லாட் பெற்றதாக கிடைக்க உள்ளது.

செல்பி படங்களை உயர்தரத்தில் பெறுவதற்கு டூயல் கேமரா பெற்ற 20 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் சென்சார் எல்இடி ஃபிளாஷ் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 16 மெகாபிக்சல் எல்இடி டூயல் டோன் ஃபிளாஷ், ஆட்டோஃபோகஸ் கொண்டதாக வந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட ZenUI 4.0 இடைமுகத்துடன் 3000mAh பேட்டரி திறன் கொண்டதாக வந்துள்ளது.

ஆசுஸ் ஜென்போன் 4 செல்பி டூயல் கேமரா விலை ரூ.14,999

ஆசஸ் ஜென்போன் 4 செல்பி ப்ரோ, ஜென்போன் 4 செல்பி டூயல் கேமரா,ஜென்போன் 4 செல்பி அறிமுகம்

ஆசுஸ் ஜென்போன் 4 செல்பி

5.5 அங்குல முழு ஐபிஎஸ் திரையுடன் கூடிய 2.5 டி வளைந்த கிளாஸ் பாதுகாப்பு பெற்ற செல்ஃபி ப்ரோ மொபைலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் கொண்டு 3ஜிபி நினைவகம் பெற்றதாக 64ஜிபி உள்ளடக்க சேமிப்புடன், இதனை நீட்டிக்க 256 ஜிபி வரையிலான சேமிப்பு மைக்ரோஎஸ்டி அட்டை ஸ்லாட் பெற்றதாக கிடைக்க உள்ளது.

செல்பி படங்களை உயர்தரத்தில் 13 மெகாபிக்சல் எல்இடி ஃபிளாஷ் வசதியுடன் வழங்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 13 மெகாபிக்சல் எல்இடி டூயல் டோன் ஃபிளாஷ் கொண்டதாக வந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட  ZenUI 4.0 இடைமுகத்துடன் 3000mAh பேட்டரி திறன் கொண்டதாக வந்துள்ளது.

ஆசுஸ் ஜென்போன் 4 செல்பி விலை ரூ.9,999

ஆசஸ் ஜென்போன் 4 செல்பி ப்ரோ, ஜென்போன் 4 செல்பி டூயல் கேமரா,ஜென்போன் 4 செல்பி அறிமுகம்

அறிமுக சலுகை

மூன்று ஸ்மார்ட்போன்களும் ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் செப்டம்பர் 21ந் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. அறிமுக சலுகையாக ஜென்போன் 4 செல்பி ப்ரோ மாடலுக்கு 100ஜிபி வரை இலவச டேட்டாவை மாதந்தோறும் 10ஜிபி என 10 மாதங்களுக்கு ரூ.309 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்யும் ஜியோ 4ஜி பயனாளர்களுக்கு வழங்குகின்றது.

ஜென்போன் 4 செல்பி டூயல் கேமரா மற்றும் ஆசுஸ் ஜென்போன் 4 செல்பி  மாடலுக்கு 50ஜிபி மற்றும் 30ஜிபி வரை இலவச டேட்டாவை மாதந்தோறும் 10 மாதங்களுக்கு ரூ.309 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்யும் ஜியோ 4ஜி பயனாளர்களுக்கு வழங்குகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here