ASUS Zenfone Live L2

ஆசுஸ் நிறுவனம், தனது இணையதளத்தில் புதிய ஆசுஸ் ஜென்ஃபோன் லைவ் எல்2 ஸ்மார்ட்போன் விபரங்களை வெளியிட்டுள்ளது. ஆனால் அறிமுக தேதி மற்றும் விலை விபரங்களை இந்நிறுவனம் அறிவிக்கவில்லை.

இந்தியாவில் முன்பாக விற்பனைக்கு கிடைக்கின்ற ஜென்ஃபோன் லைவ் ரூ.5,999 விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இதன் அடிப்படையில் புதிய ஜென்ஃபோன் லைவ் (எல்2) உருவாக்கப்பட்டுள்ளது.

ஆசுஸ் ஜென்ஃபோன் லைவ் எல்2 சிறப்புகள்

ஆண்ட்ராய்டு 8 ஓரியோ இயங்குதளத்தை கொண்டு செயல்படுகின்ற ஜென்ஃபோன் லைவ் எல்2 மாடலின் விலை மற்றும் விற்பனைக்கு கிடைக்கின்ற நாடுகள் பற்றிய விபரம் இதுவரை அறவிக்கப்படவில்லை.

5.5 அங்குல ஹெச்டி டிஸ்பிளே, 1440×720 பிக்சல் திர்மானம் பெற்று 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டுள்ள இந்த போனை இயக்குவதற்கு குவாட் கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 430 அல்லது குவால்கம் ஸ்னாப்டிராகன் 425 என இருவிதமான சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன், 2 ஜிபி ரேம், 16ஜிபி மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு வசதி மற்றும் 1 டிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை லைவ் L2 பெற்றிருக்கிறது.

கேமரா பிரிவில் 13 மெகா பிக்சல் சென்சார் கொண்டு கூடுதலாக எல்இடி ஃபிளாஷ் இணைக்கப்படுள்ளது. 5 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.  Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 4.0, GPS, 4ஜி LTE ஆதரவுடன் 3,000 எம்.ஏ.எச் பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.

ASUS Zenfone Live L2 specifications

  • 5.5 அங்குல (1440 x 720 பிக்சல்) HD+ IPS டிஸ்பிளே உடன் 18:9 aspect ratios
  • குவாட் கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 430 அல்லது குவால்கம் ஸ்னாப்டிராகன் 425
  • 2GB RAM, 16GB/32GB சேமிப்பு வசதி
  • 2TB மைக்ரோ எஸ்டி
  • ஆண்ட்ராய்டு 8.1 (Oreo) உடன் ZenUI 5.0
  • இரட்டை சிம் கார்டு ( nano + nano + microSD)
  • 13 MP ரியர் சென்சார் கேமரா எல்இடி ஃபிளாஷ், 5P lens, PDAF, f/2.0 aperture
  • 5MP செல்ஃபி கேமரா சென்சார் எல்இடி ஃபிளாஷ், f/2.4 aperture
  • ஃபேஸ் அன்லாக்
  • அளவுகள்: 147.26 x 71.77 x 8.15mm; எடை: 140g
  • 4G வோல்ட்இ, வை-ஃபை 802.11 b/g/n (2.4GHz), ப்ளூடுத் 4.2, GPS
  • 3000mAh பேட்டரி