ஆசுஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் M1 மற்றும் ஜென்ஃபோன் எலைட் போன்கள் இந்தியாவில் அறிமுகமானது

தைவான் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆசுஸ் நிறுவனம் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1 மற்றும் ஜென்போன் எலைட் (L1) மொபைல் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு போன்களின் விலைகள் முறையே 7,499 மற்றும் 5,999 ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

மேற்குறிய இரண்டு போன்களும் டூயல் சிம்களுடன் கோல்காம் ஸ்நாப்டிராகன் 430 ஆக்டோ கோர் பிராசசர்களுடன் ஆண்டிராய்டு ஓரியோ ஆபரேடிங் சிஸ்டமில், ஜென் யூசர் இன்டர்பேஸ் 5.0-கள் பொருத்தப்பட்டுள்ளது.

ஆசுஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் M1 மற்றும் ஜென்ஃபோன் எலைட் போன்கள் இந்தியாவில் அறிமுகமானது

மேக் இன் இந்தியா திட்டத்திற்கு உதவும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்திய மார்க்கெட்டில் அதிகளவில் விற்பனையாகும் என்று நம்புவதாக ஆசுஸ் நிறுவன் உயர்அதிகாரி லியோன் யூ தெரிவித்துள்ளார்.

ஜென்ஃபோன் எலைட் (L1) ஸ்மார்ட்போன்கள் 5.45 இன்ச் முழு வியூ டிஸ்பிளே, 16GB ஸ்டோரேஜ், இதை 256GB வரை விரிவுபடுத்தி கொள்ள முடியும். 13MP ரியர் கேமராகளுடன் பேஸ் டிடெக்ஷன் ஆட்டோ போகஸ்களுடன், 5MP செல்பி கேமரா, பேஸ் அனலாக் வசதிகளுடன் 3000mAh பேட்டரியை கொண்டிருக்கும்.

ஆசுஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் M1 மற்றும் ஜென்ஃபோன் எலைட் போன்கள் இந்தியாவில் அறிமுகமானது

ஜென்ஃபோன் மேக்ஸ் (M1) ஸ்மார்ட்போன்கள் 5.45 இன்ச் முழு வியூ டிஸ்பிளே, 16GB ஸ்டோரேஜ், இதை 32GB வரை விரிவுபடுத்தி கொள்ள முடியும். 256GB ரியர் கேமராகளுடன் பேஸ் டிடெக்ஷன் ஆட்டோ போகஸ்களுடன், 8MP செல்பி கேமரா, பேஸ் அனலாக் வசதிகளுடன் 4000mAh பேட்டரியை கொண்டிருக்கும்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் பிளாக் மற்றும் கோல்ட் கலரில் பிளிப்கார்ட்டில் கிடைக்கும்.