ஆசுஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ M2 ஸ்மார்ட்போன் நாளை அறிமுகமாகுமா?

தைவான் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆசுஸ் நிறுவனம் டெல்லியில் நாளை நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது.

இந்த நிகழ்வு தயாரிப்பு அறிமுகமாக இருக்குமா? என்பது குறித்து தகவல்களை ஆசுஸ் நிறுவனம் வெளியிடவில்லை என்றபோதும், மார்க்கெட்டில் இந்த நிகழ்வின் போது புதிய ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என்று வதந்திகள் பரவி வருகிறது. மேலும் இந்த நிகழ்வில் மேக்ஸ் ப்ரோ M2 ஸ்மார்ட்போன் சீரிஸ்கள் வெளியிடப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ M1 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது முதலே பெரியளவில் வெற்றியை கொடுத்து வருகிறது. இதுவே ஆசுஸ் நிறுவனத்தின் முதல் ஸ்டாக் ஆண்டிராய்டு தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசுஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ M2 ஸ்மார்ட்போன் நாளை அறிமுகமாகுமா?

ஆசுஸ் நிறுவனம் இந்த வெற்றி பெற்ற ஸ்மார்ட்போன் சீரிஸ்களை உருவாக்கி வருவதாக சில வதந்திகள் பரவி வருகிறது. ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ M1 ஸ்மார்ட்போன்கள் அறிமுகத்திற்கு பின்னர் நிறுவனம் இரண்டு புதிய மாடல்களை அறிமுகம் செய்யும் என்றும், இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் ரெட்மீ 6 சீரிஸ் போன்று இருக்கும் என்றும் தகவல் பரவியது.

சமீபத்தில் ஆசுஸ் நிறுவனத்தின் ஜென்ஃபோன் மேக்ஸ் M2 மற்றும் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ M2 ஸ்மார்ட்போன், ரஷ்யாவில் உள்ள யூரேசிய பொருளாதார ஆணையத்தின் சான்றிதழ் பெற விண்ணப்பம் செய்துள்ள பட்டியலில் இடம் பெற்றிருந்தது. அந்த பட்டியலில் ZB633KL மற்றும் ZB631KL மாடல்கள் இடம் பெற்றிருந்தது. இந்த சர்டிபிகேட் பெறுவதால், இந்த டிவைஸ்கள் ஆண்டிராய்டு 8.0 ஓரியோ ஒஎஸ் கொண்டிருக்கும் என்று தெரிய வந்துள்ளது. இருந்தபோதும் இந்த டிவைஸ்கள் நாளை நடக்கும் நிகழ்வில் அறிமுகம் செய்யப்படாது என்று தெரிகிறது.