ரூ. 7000 விலையில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஸ்மார்ட்போன் மாடல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 சிறந்த மொபைல்கள் பற்றி எந்த மொபைல் வாங்கலாம் 2017 ? தொடரில் காணலாம்.

ரூ. 7000-க்குள் அற்புதமான 5 ஸ்மார்ட்போன்கள் - 2017

அற்புதமான 5 ஸ்மார்ட்போன்கள் – 2017

இந்தியர்களின் மனதை மிகவும் கொள்ள கொள்ளும் மாடல்களாக விளங்கும் ரெட்மி உள்பட மிக சிறந்த மோட்டோ வரை தொகுக்கப்பட்டுள்ள அற்புதமான மாடல்களை இங்கே காணலாம்.

ரூ. 7000-க்குள் அற்புதமான 5 ஸ்மார்ட்போன்கள் - 2017

சியோமி ரெட்மி 4A

இந்திய சந்தையில் சுடச்சுட விற்பனை செய்யப்படுகின்ற மாடல்களில் முதலிடத்தை பிடிக்கும் ஜியோமி நிறுவனத்தின் ரெட்மி 4A மொபைல் ரூ.5,999 விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

5 அங்குல ஹெச்டி ஐபிஎஸ் திரை பெற்று க்வாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 SoC உடன் 64 பிட் பிராசஸருடன் 2GB ரேம் பெற்று 16 ஜிபி சேமிப்பு வசதியுடன் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை சேமிப்பினை அதிகரிக்கலாம். 13 மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் பெற்று விளங்குகின்றது.

3120mAh திறன் கொண்ட பேட்டரியுடன் விளங்குகின்ற ரெட்மி 4A மொபைலை அமேசான் மற்றும் Mi.com தளத்திலும் வாங்கலாம்.

ரூ. 7000-க்குள் அற்புதமான 5 ஸ்மார்ட்போன்கள் - 2017

2. சியோமி ரெட்மி 4

சியோமி நிறுவனத்தின் சுடச்சட விற்பனை செய்யப்படுகின்ற மற்றொரு மாடலாக சியோமி ரெட்மி 4 விலை ரூ.6,999 ஆகும். இந்த மாடலில் மொத்தம் மூன்று விதமாக விற்பனை செய்யப்படுகின்றது.

5 அங்குல ஹெச்டி ஐபிஎஸ் திரை பெற்று க்வாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 SoC உடன் 64 பிட் பிராசஸருடன் 2GB ரேம் பெற்று 16 ஜிபி சேமிப்பு வசதியுடன் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை சேமிப்பினை அதிகரிக்கலாம். 13 மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் பெற்று விளங்குகின்றது.

3120mAh திறன் கொண்ட பேட்டரியுடன் விளங்குகின்ற ரெட்மி 4 மொபைலை அமேசான் மற்றும் Mi.com தளத்திலும் வாங்கலாம்.

ரூ. 7000-க்குள் அற்புதமான 5 ஸ்மார்ட்போன்கள் - 2017

3. மோட்டோ C ப்ளஸ்

புதிதாக ஃபிளிப்கார்ட் விற்பனை செய்யப்படுகின்ற பட்ஜெட் ரக மொபைல் மாடலான மோட்டோ சி மொபைலில் 4ஜி வசதியுடன் ரூ.6999 விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

5 அங்குல ஹெச்டி  திரை பெற்று க்வாட்கோர் மீடியாடெக் MT6737 பிராசஸர் பெற்று 1GB ரேம் மற்றும் 2GB ரேம் என இருவிதமான ஆப்ஷன் பெற்று 16ஜிபி  பெற்று 16 ஜிபி சேமிப்பு வசதியுடன் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 32 ஜிபி வரை சேமிப்பினை அதிகரிக்கலாம். 5 மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் முன்புறத்தில் 2 மெகாபிக்சல் பெற்று விளங்குகின்றது.

4000mAh திறன் கொண்ட பேட்டரியுடன் விளங்குகின்ற மோட்டோ சி பிளஸ் மொபைலை ஃபிளிப்கார்ட் தளத்தில் வாங்கலாம்.

ரூ. 7000-க்குள் அற்புதமான 5 ஸ்மார்ட்போன்கள் - 2017

4. கூல்பேட் நோட் 3 லைட்

குறைந்த விலையில் அதிக வசதிகளை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கூல்பேட் நிறுவனத்தின் கூல்பேட் நோட் 3 லைட் விலை ரூ. 6,999 மட்டுமே.

5 அங்குல 720p தீர்மானத்துடன் கூடிய திரை பெற்று 1.35 GHz க்வாட் கோர் மீடியாடெக் MT6735 பிராசஸருடன் 3GB ரேம் பெற்று 16 ஜிபி சேமிப்பு வசதியுடன் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை சேமிப்பினை அதிகரிக்கலாம். 13 மெகாபிக்சல் மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் பெற்று விளங்குகின்றது.

2500mAh திறன் கொண்ட பேட்டரியுடன் விளங்குகின்ற கூல்பேட் நோட் 3 லைட் மொபைலை அமேசானில் வாங்கலாம்.

ரூ. 7000-க்குள் அற்புதமான 5 ஸ்மார்ட்போன்கள் - 2017

5. சாம்சங் J1 4ஜி

உலகின் முன்னணி சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மாடல்களில் தொடக்கநிலை சந்தைக்கு ஏற்ற மொபைலாக விளங்கும் சாம்சங் ஜே1 4ஜி (2017) மொபைல் ரூ. 6,890 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

4.5 அங்குல திரை பெற்று 1.35 GHz க்வாட் கோர் பிராசஸருடன் 1GB ரேம் பெற்று 8 ஜிபி சேமிப்பு வசதியுடன் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை சேமிப்பினை அதிகரிக்கலாம். 5 மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் முன்புறத்தில் 2 மெகாபிக்சல் பெற்று விளங்குகின்றது.

2050mAh திறன் கொண்ட பேட்டரியுடன் விளங்குகின்ற சாம்சங் J1 4G (2017) மொபைலை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டிலும் வாங்கலாம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here