ரூ.7,000 முதல் ரூ.10,000 வரையில் உள்ள சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள்

இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்ற ஸ்மார்ட்போன் மாடல்களில் ரூபாய் 10,000 அதற்கு குறைந்த விலையில் 4ஜி சேவையை வழங்கும் சிறந்த மொபைல்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் தொடர்ந்து காணலாம்.

பொதுவாக இங்கே தொகுக்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்கள் கடந்த சில மாதங்களுக்குள் அல்லது சில நாட்களுக்குள் வந்த ஸ்மார்ட்போன்கள் மட்டும் தொகுப்பட்டுள்ள லேட்டஸ்ட் மொபைல் போன்களாகும்.

1.  ரெட்மி நோட் 7

12 எம்பி மற்றும் 2 எம்பி சென்சார் உடன் கூடிய டூயல் கேமரா செட்டப் பெற்று செல்ஃபி படங்களுக்கு என 13 எம்பி கேமராவை கொண்ட ரெட்மி நோட் 7 போனில் வழங்கப்பட்டுள்ள ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் உடன் 3 ஜிபி ரேம், 4 ஜிபி ரேம் மாறுபாட்டில் கிடைக்கின்றது. ரெட்மி நோட் 7-ன் விலை 3GB+32GB -ரூ.9,999 மற்றும் 4GB+64GB – ரூ.11,999 ஆகும்.

ரூ.7,000 முதல் ரூ.10,000 வரையில் உள்ள சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள்

2. சாம்சங் கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்20

கேலக்ஸி எம் சீரிஸ் வரிசையில் உள்ள கேலக்ஸி எம்10 மற்றும் கேலக்ஸி எம்20 என இரு மாடல்ளும் பட்ஜெட் விலையில் அமைந்துள்ள சிறந்த போன் மாடல்களாகும்.

சாம்சங்கின் கேலக்ஸி M10 மொபைல் போன் 2 GB உடன் 16 GB விலை ரூபாய் 7,990 மற்றும் கேலக்ஸி M10  3 GB உடன் 32 GB விலை ரூபாய் 8,990 என அமைந்திருக்கின்றது.

சாம்சங்கின் கேலக்ஸி M20 மொபைல் போன் 3 GB உடன் 32 GB விலை ரூபாய் 10,990 மற்றும் கேலக்ஸி M20  4 GB உடன் 64 GB விலை ரூபாய் 12,990 என அமைந்திருக்கின்றது.

3. ரியல்மி 3

ரியல்மீ நிறுவனத்தின் ரியல்மி 3 போனில் 13 எம்பி மற்றும் 2 எம்பி சென்சார் உடன் கூடிய டூயல் கேமரா செட்டப் பெற்று செல்ஃபி படங்களுக்கு என 13 எம்பி கேமராவை கொண்ட இந்த போனில் வழங்கப்பட்டுள்ள ஹீலியோ பி70 சிப்செட் உடன் 3 ஜிபி ரேம், 4 ஜிபி ரேம் மாறுபாட்டில் கிடைக்கின்றது. ரெட்மி நோட் 7-ன் விலை 3GB+32GB -ரூ.8,999 மற்றும் 4GB+64GB – ரூ.10,999 ஆகும்.

ரூ.7,000 முதல் ரூ.10,000 வரையில் உள்ள சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள்

4. விவோ Y91i

சமீபத்தில் வெளியான விவோ வைய்91ஐ போனில் 13 எம்பி கேமரா செட்டப்  மற்றும் 5 எம்பி செல்ஃபி பெற்றதாக விவோ Y91i  2 ஜிபி ரேம் + 16 ஜிபி சேமிப்பு – ரூபாய் 7900 மற்றும் 2 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு – ரூபாய் 8490 ஆகும்.

ரூ.7,000 முதல் ரூ.10,000 வரையில் உள்ள சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள்

5. நோக்கியா 3.1 பிளஸ்

நோக்கியா 3.1 பிளஸ் ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் பெற்ற இந்த மாடலில் 13 எம்பி மற்றும் 5 எம்பி டூயல் கேமரா செட்டப் பெற்று கூடுதலாக செல்ஃபி படங்களுக்கு 8 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. நோக்கியா 3.1 பிளஸ் விலை ரூ.9,500 ஆகும்.

ரூ.7,000 முதல் ரூ.10,000 வரையில் உள்ள சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள்

மேலும் கவனத்தில் கொள்ள வேண்டிய பட்ஜெட் விலை மொபைல் போன் மாடல்கள் ஆசுஸ் ஜென்போன் மேக்ஸ் எம்1 ரூ.9,999 விலையில் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாகவும், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் பெற்ற மாடல் ரூபாய் 11,999 ஆகும்.

இதனை தொடர்ந்து சாம்சங் கேலக்ஸி ஏ10 போன் மாடல் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி கொண்டதாக கிடைக்கின்ற இந்த மொபைல் போன் ரூபாய் 8490 விலையில் கிடைக்கின்றது.