ரூ.10,000 விலையில் அற்புதமான 5 ஸ்மார்ட்போன்கள்

எந்த ஸ்மார்ட்போன் வாங்கலாம் என்பதற்கு தீர்வாக அதிகப்படியான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்யும் சிறந்த 5 ஸ்மார்ட்போன் மாடல்களை ரூ.10,000 விலைக்குள் அறிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் சீன மொபைல் தயாரிப்பாளர்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சியோமி இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளராக விளங்கி வருகின்றது.

1 . சாம்சங் கேலக்ஸி எம்10

மிகச்சிறந்த வசதிகளை பெற்ற குறைந்த விலை கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்10 மொபைல் 2ஜிபி + 16ஜிபி சேமிப்பு பெற்ற மாடல் ரூ.7,990 விலையிலும்,  3ஜிபி + 32ஜிபி சேமிப்பு பெற்ற வகை ரூ.8,990 விலையிலும் விற்பனைக்கு கிடைக்கின்றது.

6.22 அங்குல இன்ஃபினிட்டி யூ டிஸ்பிளே பெற்று Exynos 7870 கொண்ட இந்த போனில் டூயல் கேமரா செட்டப் வழங்கப்பட்டு 13 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு என 5 மெகாபிக்சல் கேமரா, 3,400mAh பேட்டரி கொண்டு பட்ஜெட் விலையில் அற்புதமான மாடலாக விளங்குகின்றது.

ரூ.10,000 விலையில் அற்புதமான 5 ஸ்மார்ட்போன்கள்

2. சியோமி ரெட்மி நோட் 7

சியோமி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்கின்ற மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் மாடல்களில் ஒன்றாக விளங்குகின்றது. சியோமி ரெட்மி நோட் 7 மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் உடன் செயல்பட்டு 3  ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி பெற்ற மாடல் ரூ.9,999 விலையிலும், 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி உள்ள நோட் 7 ஸ்மார்ட்போன் 11,999 ரூபாய் ஆகும்.

நோட் 7 போனில் 13 எம்பி மற்றும் 2 எம்பி கேமரா என டூயல் செட்டப்பை பின்புறத்தில் கொண்டுள்ளது. செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 13 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு கேமராவிலும் செயற்கை அறிவுத்திறன் சேர்க்கப்பட்டுள்ளது.  4,000mAh பேட்டரி பெற்று 6.3 அங்குல திரையை பெற்றுள்ளது.

note 7

3. ரியல்மி 3

சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக விளங்கும்  ரியல்மி நிறுவனத்தின் 3 ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பை கொண்ட மாடல் ரூபாய் 8,999 எனவும், மற்றொரு ரியல்மி 3 போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பை கொண்ட மாடல் ரூபாய் 10,999 என கிடைக்கின்றது.

6.2 அங்குல டியூடிராப் டிஸ்பிளே உடன் ஹீலியோ P70  பெற்ற இந்த போனின் கேமரா பிரிவில் டுயல் கேமரா செட்டப் 13 எம்பி உடன் 2 எம்பி சென்சார் ஆதரவை கொண்டுள்ளது. இதில் செல்ஃபி பிரிவில் 13 எம்பி சென்சார் பெற்றதாக வந்துள்ளது. இந்த போனை இயக்க 4,230mAh பேட்டரி பெற்றுள்ளது.

realme 3

4 . நோக்கியா 3.1 பிளஸ்

P22 ஆக்டோ-கோர் பிராசசர் மற்றும் 3500mAh பேட்டரியுடன் கூடிய 6 அங்குல திரையை பெற்று 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு கொண்ட நோக்கியா 3.1 பிளஸ் விலை ரூ.8,990 ஆகும். இந்த போனின் கேமரா பிரிவில் டுயல் கேமரா செட்டப் 13 எம்பி உடன் 5 எம்பி சென்சார் ஆதரவை கொண்டுள்ளது. இதில் செல்ஃபி பிரிவில் 8 எம்பி சென்சார் பெற்றதாக வந்துள்ளது.

nokia 3.1 plus

5. சியோமி ரெட்மி Y3

ஸ்னாப்டிராகன் 632 சிப்செட் கொண்டு 6.26 அங்குல முழு எச்டி பிளஸ் டாட் நாட்ச் டிஸ்பிளே பெற்ற இந்த போனில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் பிரைமரி ஆப்ஷனில் 12 மெகாபிக்சல் பிரைமரி கேமரா சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் பெற்றுள்ளது.

சியோமி ரெட்மி Y3 ரூ. 9,999 (3GB+32GB) மற்றும் ரெட்மி Y3 ரூ.11,999 (4GB+64GB)

redmi y3