Black Shark 2 gaming smartphone

சியோமியின் பின்புலத்தில் இயங்கும் பிளாக் ஷார்க் நிறுவனத்தின் , பிளாக் ஷார்க் 2 கேமிங் சார்ந்த ஸ்மார்ட்போன் சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம், 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் என மூன்று வகை மாறுபாட்டில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

கேமிங் சார்ந்த செயல்பாடுகளுக்கு என பிரத்தியேகமாக வடிவமைக்கபட்டு விற்பனை செய்யப்படுகின்ற பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன்கள், முன்பாக பிளாக் ஷார்க் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்த கில்லர் மாடலாக பிளாக் ஷார்க் 2 இன்றைக்கு வெளியாகியுள்ளது. அடுத்த சில மாதங்களுக்குள் இந்திய சந்தையில் பிளாக் ஷார்க்கின் போன்கள் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

பிளாக் ஷார்க் 2 ஸ்மார்ட்போனின் வசதிகள்

சீனாவை தலைமையிடமாக கொண்ட சியோமி நிறுவனத்தின் பின்புலத்தில் செயல்படும் பிளாக் ஷார்க் நிறுவனத்தின் இரண்டாவது ஸ்மார்ட்போன் மாடலாக வெளிவந்துள்ள பிளாக் ஷார்க் 2 போனில் உள்ள வசதிகளை தொடர்ந்து காணலாம்.

6.39 அங்குல முழு ஹெச்டி பிளஸ் திரையை பெற்று 2340 × 1080 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்டு செயல்படுகின்றது. குவால்காம் நிறுவன ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் பிராசெஸருடன் கூடிய இந்த போனில் வழங்கப்பட்டுள்ள இன்டிஸ்பிளே கைரேகை சென்சார் 43.5 மில்லிவிநாடிகளில் திறக்கும் திறன் கொண்டதாகும்.

மேலும் இந்த போனில் ஸ்னாப்டிராகனின் எலைட் கேமிங் பெர்ஃபாமென்ஸ் வழங்கப்பட்டு, ஆப்பிள் 3டி டச் போல செயல்படுகின்ற மேஜிக் பிரஸ் எனப்படும் அழுத்தத்தை உணர்ந்து செயல்படும் வசதி மற்றும் இந்த போனில் மிகவும் கவனிக்கதக்க லிக்யூடு கூல் 3.0 அம்சம் போனின் வெப்பத்தை கண்கானித்து வெப்பம் குறைக்க செயல்திறனில் மாற்றம் இல்லாமல் வழங்கியுள்ளது. artificial intelligence (AI) கூடிய ஆடியோ அம்சமானது, இரைச்சலை குறைத்து ஆடியோவினை தெளிவாக வழங்க வழி வகுக்கின்றது.

பிளாக் ஷார்க் 2 ஸ்மார்ட்போன் வசதிகள் மற்றும் விலை வெளியானது

கேமரா பிரிவில் டூயல் கேமரா செட்டப் பெற்று 48MP ரியர் பிரைமரி 1/2.0″ சோனி IMX586 சென்சார், 0.8μm பிக்சல், f/1.75 aperture, எல்இடி ஃபிளாஷ், மற்றும் 12MP சென்சார் வழங்கப்பட்டுள்ளது.  20MP முன்புற செல்பி மற்றும் வீடியோ காலிங் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

4G VoLTE, வை-ஃபை 802.11ac, ப்ளூடூத் v5.0, GPS/ A-GPS, மற்றும் யூஎஸ்பி Type-C port ஆகியவற்றை பெற்று 27W ஃபாஸ்ட் சார்ஜருடன் 4000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

சியோமி பிளாக் ஷார்க் விலை பட்டியல்

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி பெற்ற மாடல் CNY 3,199 (தோராயமாக ரூ. 32,700), 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி பெற்ற மாடல் CNY 3,499 (தோராயமாக ரூ. 35,800) , 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதி பெற்ற மாடல் CNY 3,799 (தோராயமாக ரூ. 38,700) மற்றும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதி பெற்ற மாடல் CNY 4,199 (தோராயமாக ரூ. 42,800) ஆகும்.

Xiaomi Black Shark 2 specifications

  • 6.39-inch (2340 × 1080 pixels) Full HD+ 19.5:9 டிஸ்பிளே 108.9% DCI – P3 color gamut, 430 பிரைட்னஸ்
  • ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 855 7nm (1 x 2.84GHz Kryo 485 + 3 x 2.42GHz Kryo 485 + 4x 1.80GHz Kryo 485) உடன் Adreno 640 GPU
  • 6GB / 8GB LPDDR4x ரேம் உடன் 128GB சேமிப்பு வசதி, 8GB / 12GB LPDDR4x ரேம் உடன் 256GB சேமிப்பு
  • ஆண்ட்ராய்டு 9.0 (Pie)
  • டூயல் சிம் (nano + nano)
  • 48MP ரியர் பிரைமரி 1/2.0″ சோனி IMX586 சென்சார், 0.8μm பிக்சல், f/1.75 aperture, எல்இடி ஃபிளாஷ், 12MP 1/3.6″ சாம்சங் S5K3M5, மற்றும் telephoto lens with f/2.2 aperture, 1.0μm பிக்சல், 6P lens, 2x lossless zoom,
  • 20MP முன்புற செல்ஃபி கேமரா 0.9μm பிக்சல்,  f/2.0 துளை
  • இன்டிஸ்பிளே கைரேகை சென்சார்
  • அளவுகள்: 163.61×75.01x 8.77mm; Weight: 205g
  • டூயல் 4G VoLTE, வை-ஃபை 802.11ac dual-band (2×2 MU-MIMO ), ப்ளூடூத் 5, GPS/GLONASS/Beidou, USB Type-C
  • 27W ஃபாஸ்ட் சார்ஜருடன் 4000mAh பேட்டரி