சியோமியின் மற்றொரு பிராண்டான பிளாக் ஷார்க், வரும் மே 27 ஆம் தேதி இந்தியாவில் மிகவும் பவர்ஃபுல்லான பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்பனை விற்பனைக்கு வெளியிட உள்ளது.
வீடியோ கேமின் போது ஏற்படுகின்ற மொபைல் வெப்பத்தை குறைப்பதற்கு பிரத்தியேகமான லிக்யூடு கூல் 3.0 நுட்பத்தை கொண்டு இயங்கும் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் பெற்ற மாடலாகும்.
பிளாக் ஷார்க் 2 சிறப்புகள்
சியோமி பிளாக்ஷார்க் 2 போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ள நிலையில் இந்த மாடலில் 6 ஜிபி ரேம், 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் என மூன்று வகையில் சீன சந்தையில் கிடைக்கின்றது.
6.39 அங்குல முழு ஹெச்டி பிளஸ் திரையை பெற்று 2340 × 1080 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்ட போனில் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் உடன் 6 ஜிபி ரேம், 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் கொண்டுள்ளது. இதில் 128 ஜிபி சேமிப்பு மற்றும் 256 ஜிபி சேமிப்பு என இரு மாறுபாட்டில் வழங்ப்பட உள்ளது.
கேமரா பிரிவில் டூயல் கேமரா செட்டப் பெற்று 48MP ரியர் பிரைமரி 1/2.0″ சோனி IMX586 சென்சார், 0.8μm பிக்சல், f/1.75 aperture, எல்இடி ஃபிளாஷ், மற்றும் 12MP சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 20MP முன்புற செல்பி மற்றும் வீடியோ காலிங் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
- ஸ்னாப்டிராகனின் எலைட் கேமிங் பெர்ஃபாமென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
- ஆப்பிள் 3டி டச் போல செயல்படும் மேஜிக் பிரஸ் எனப்படும் அழுத்தத்தை உணர்ந்து செயல்படும் வசதி
- லிக்யூடு கூல் 3.0 அம்சம் போனின் வெப்பத்தை கண்கானித்து வெப்பம் குறைக்க செயல்திறனில் மாற்றம் இல்லாமல் இயங்க உதவும்.
- artificial intelligence (AI) கூடிய ஆடியோ அம்சமானது, இரைச்சலை குறைத்து ஆடியோவினை தெளிவாக பெற உதவும்.
- இன்டிஸ்பிளே கைரேகை சென்சார் 43.5 மில்லிவிநாடிகளில் இயங்கும்.
- 4000mAh பேட்டரி உடன் ஃபாஸட் சார்ஜிங் நுட்பம் இடம் பெற்றுள்ளது.
Black Shark 2 specifications
- 6.39 அங்குல (2340 × 1080 pixels) Full HD+ 19.5:9 டிஸ்பிளே 108.9% DCI – P3 color gamut, 430 பிரைட்னஸ்
- ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 855 7nm (1 x 2.84GHz Kryo 485 + 3 x 2.42GHz Kryo 485 + 4x 1.80GHz Kryo 485) உடன் Adreno 640 GPU
- 6GB / 8GB LPDDR4x ரேம் உடன் 128GB சேமிப்பு வசதி, 8GB / 12GB LPDDR4x ரேம் உடன் 256GB சேமிப்பு
- ஆண்ட்ராய்டு 9.0 (Pie)
- டூயல் சிம் (nano + nano)
- 48MP ரியர் பிரைமரி 1/2.0″ சோனி IMX586 சென்சார், 0.8μm பிக்சல், f/1.75 aperture, எல்இடி ஃபிளாஷ், 12MP 1/3.6″ சாம்சங் S5K3M5, மற்றும் telephoto lens with f/2.2 aperture, 1.0μm பிக்சல், 6P lens, 2x lossless zoom,
- 20MP முன்புற செல்ஃபி கேமரா 0.9μm பிக்சல், f/2.0 துளை
- இன்டிஸ்பிளே கைரேகை சென்சார்
- அளவுகள்: 163.61×75.01x 8.77mm; எடை: 205g
- டூயல் 4G VoLTE, வை-ஃபை 802.11ac dual-band (2×2 MU-MIMO ), ப்ளூடூத் 5, GPS/GLONASS/Beidou, USB Type-C
- 27W ஃபாஸ்ட் சார்ஜருடன் 4000mAh பேட்டரி
இங்கே வழங்கப்பட்டுள்ள விலை பட்டியல் சீன சந்தையில் வெளியிடப்பட்ட மாடலின் அடிப்படையில் அமைந்துள்ளது.
- 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி பெற்ற மாடல் CNY 3,199 (தோராயமாக ரூ. 32,700)
- 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி பெற்ற மாடல் CNY 3,499 (தோராயமாக ரூ. 35,800)
- 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதி பெற்ற மாடல் CNY 3,799 (தோராயமாக ரூ. 38,700)
- 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதி பெற்ற மாடல் CNY 4,199 (தோராயமாக ரூ. 42,800)