பிரசத்தி பெற்ற பிளாக்பெர்ரி நிறுவனத்தின் பிளாக்பெர்ரி கீஒன் லிமிடேட் பிளாக் எடிஷன் ஸ்மார்ட்போன் QWERTY கீபோர்டினை பெற்றதாக ரூ.39,990 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.39,990 விலையில் பிளாக்பெர்ரி கீஒன் பிளாக் எடிஷன் அறிமுகம்.!

பிளாக்பெர்ரி கீஒன் பிளாக் எடிஷன்

2017 சர்வதேச மொபைல் காங்கிரஸ் கருத்தரங்கில் முதன்முறையாக அறிமுகம் செய்யபட்ட ஆண்ட்ராய்டு அடிப்படையிலான கீஒன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் ஆப்டைமஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ரூ.39,990 விலையில் பிளாக்பெர்ரி கீஒன் பிளாக் எடிஷன் அறிமுகம்.!

திரை மற்றும் பிராசஸர்

4.5 அங்குல முழு ஹெச்டி திரையுடன் வந்துள்ள இந்த கருவி 1080×1620 பிக்சலை பெற்று  க்வால்காம் ஸ்னாப்டிராக் 625 SoC உடன் செயல்படுகின்ற 3GB ரேம் பெற்று  32GB வரையிலான சேமிப்பினை பெற்று விளங்குகின்றது. கூடுதலாக மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 2TB வரை விரிவாக்க இயலும்.

ரூ.39,990 விலையில் பிளாக்பெர்ரி கீஒன் பிளாக் எடிஷன் அறிமுகம்.!

கேமரா

மிக சிறப்பான 4K வீடியோவினை பதிவு செய்யும் வகையிலான கேமராவை பெற்று விளங்குகின்ற கீஒன் மொபைல் 12 மெகாபிக்சல் பின்புற கேமராவில் சோனி IMX378 சென்சாருடன் இணைந்த டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ் போன்றவை பெற்றுள்ளது.

முன்புறத்தில் மிக சிறப்பான செல்ஃபீ படங்களை வெளிப்படுத்தும் 8 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது.

ரூ.39,990 விலையில் பிளாக்பெர்ரி கீஒன் பிளாக் எடிஷன் அறிமுகம்.!

பேட்டரி

மிகவேகமாக சார் ஏறும் குயீக் சார்ஜ் 3.0 வினை பெற்றுள்ளதால் 50 சதவீத சார்ஜ் 36 நிமிடங்களில் ஏறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3505mAh பேட்டரி சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும்.

மற்றவை

கீபோர்டுடன் இணைந்த கைரேகை ஸ்கேனர் , ஆண்ட்ராய்டு 7.1 நெளகட் இயங்குதளத்தில் செயல்படுகின்ற கீஒன் ஸ்மார்ட்போனில் இரட்டை சிம் கார்டு, Wi-Fi 802.11/b/g/n/ac, பூளூடுத் 4.2, ஜிபிஎஸ், 4G LTE, VoLTE, மற்றும் என்எஃப்சி போன்றவை இடபெற்றுள்ளது.

ரூ.39,990 விலையில் பிளாக்பெர்ரி கீஒன் பிளாக் எடிஷன் அறிமுகம்.!

பிளாக்பெர்ரி கீஒன் விலை

வருகின்ற ஆகஸ்ட் 8ந் தேதி  முதல் அமேசான் இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ள பிளாக்பெர்ரி கீஒன் ஸ்மார்ட்போன் விலை ரூ.39,990 ஆகும். சிறப்பு சலுகையாக வோடஃபோன் போஸ்ட்பெயிட் மற்றும் ப்ரீபெயிட் வாடிக்கையார்களுக்கு மூன்று மாதங்களுக்கு அதிகபட்சமாக 75ஜிபி டேட்டா வழங்குகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here