போல்ட் ஆடியோ அறிமுகம் செய்யும் 'ஸ்பேஸ் வயர்லெஸ்’ இயர்போன்

போல்ட் ஆடியோவின் ஸ்பேஸ் இன் – இயர்போன்களில் குவால்கம் சிஎஸ்ஆர்8635 சிப்செட், நியோடைமியம் தொழில்நுட்பம், ப்ளூடூத் வெர்ஷன் 4.1 கொண்டது.

இந்தியாவில் ஸ்பேஸ் இன் – இயர்போன்களை போல்ட் ஆடியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.1,375 ஆகும். இந்த இயர்போனில் குவால்கம் சிஎஸ்ஆர்8635 சிப்செட், நியோடைமியம் தொழில்நுட்பம், ப்ளூடூத் வெர்ஷன் 4.1 இருக்கிறது.

 

போல்ட் ஆடியோ அறிமுகம் செய்யும் 'ஸ்பேஸ் வயர்லெஸ்’ இயர்போன்
IPX4 மதிப்பீடு பெற்றுள்ளது. வியர்வை, தண்ணீரால் எந்தவித பாதிப்பிற்கும் ஆளாகாது. போல்ட் ஸ்பேஸில் 100mAh பேட்டரி, 3.7V பேட்டரி சேமிப்பு, 12 மணி நேரம் தொடர்ச்சியாக இசை கேட்கும் ஆற்றல் கொண்டது.

இது ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு என அனைத்து ஓ.எஸ் உடனும் பொருந்தக்கூடியது. அதேபோல் ப்ளூடூத் மூலமும் லேப்டாப், பிசி, டேப்லட், ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன்கள் உடன் இணைத்துக் கொள்ளலாம்.

போல்ட் ஆடியோ அறிமுகம் செய்யும் 'ஸ்பேஸ் வயர்லெஸ்’ இயர்போன்
இசை கேட்பது, தொலைபேசி அழைப்புகளைக் கட்டுப்படுத்துவது, 3டி ஹெச்.டி சவுண்ட், இரைச்சல் குறைப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.