மைக்ரோமேக்ஸ் பாரத் 1 4ஜி போன் அறிமுகம் - பிஎஸ்என்எல் போன்

ரூ.2200 விலையில் மைக்ரோமேக்ஸ் பாரத் ஒன் 4ஜி பீச்சர் போன் பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனத்துடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் பாரத் 1

மைக்ரோமேக்ஸ் பாரத் 1 4ஜி போன் அறிமுகம் - பிஎஸ்என்எல் போன்

 

 

ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பிறகு மிக கடுமையான சவால்களை எதிர்கொண்டு வரும் தொலைத்தொடர்பு துறையில் நாட்டின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தனியார் நிறுவனங்களை எதிர்கொள்ள அதிரடியான திட்டங்கள் மற்றும் வசதிகளுடன், தற்போது 4ஜி வோல்ட்இ ஆதரவு பெற்ற மொபைல் போனை மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளது.

இந்த மொபைல் போன் இரட்டை சிம் ஸ்லாட் பெற்றிருக்கின்ற நிலையில் பிஎஸ்என்எல் சிம் பன்டில் சலுகையாகவும், கூடுதலாக உள்ள ஸ்லாட்டில் எந்த நெட்வொர்க்கின் சிம் கார்டினையும் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் டிஜிட்டல் சார்ந்த நடவடிக்கைகளின் சார்பாக அறிமுகம் செய்யப்பட்ட பீம் செயலியை பெற்ற முதல் ஃபீச்சர் ரக மொபைல் போன் மாடலாக பாரத் 1 விளங்குகின்றது.

மைக்ரோமேக்ஸ் பாரத் 1 4ஜி போன் அறிமுகம் - பிஎஸ்என்எல் போன்

பாரத் 1 நுட்ப விபரம்

பாரத் 1 மொபைல் போன் 2.4 அங்குல QVGA திரையுடன் டி9 கீபோர்டு கொண்டிருப்பதுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 205 பிராசஸர் பெற்றதாக உள்ள கருவி 512MB ரேம் கொண்டு 4ஜிபி சேமிப்பை கொண்டதாக வந்துள்ளது.

2000mAH பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற இந்த மொபைலில் பின்புறத்தில் 2 மெகாபிக்சல் பெற்றதாகவும், முன்புறத்தில் VGA  கேமரா பெற்றதாக வந்துள்ளது. 22 இந்திய மொழி ஆதரவினை பெற்றுள்ள இந்த கருவியில் பீம் செயலியுடன் நேரலையில் தொலைக்காட்சி சேவைகளை பெறும் வகையிலான வசதியை பாரத் ஒன் பெற்றுள்ளது.

மைக்ரோமேக்ஸ் பாரத் 1 4ஜி போன் அறிமுகம் - பிஎஸ்என்எல் போன்

பிஎஸ்என்எல் டேட்டா பிளான்

பன்டில் சலுகையாக கிடைக்க உள்ள பிஎஸ்என்ல் சிம் சிறப்பு சலுகையாக பிஎஸ்என்எல் 97 என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. ரூ.97 கட்டணத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுடன் டேட்டா சலுகையும் 28 நாட்களுக்கு வழங்குகின்றது.

Desh ka 4G phone என்ற கோஷத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த மொபைல் போன் ஜியோபோன் உடன் ஒப்பீடுகையில் மிக குறைந்த செலவையை கொண்டதாகவே வந்துள்ளது.

மைக்ரோமேக்ஸ் பாரத் 1 4ஜி போன் அறிமுகம் - பிஎஸ்என்எல் போன்

வருகின்ற அக்டோபர் 20ந் தேதி முதல் அனைத்து முன்னணி மொபைல் ரீடெயிலர்களிடமும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

சமீபத்தில் ரூ.1500 விலையில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப பெறும் வகையிலான ரிலையன்ஸ் ஜியோபோன் மற்றும் ரூ.2899 விலையில் கார்பன் ஏ40 மொபைலின் ஏர்டெல் 4ஜி  ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1500 கட்டணத்தை திரும்ப பெறும் வகையில் இந்த  மொபைல் ரூ.1399 விலையில் கிடைக்கின்றது.

இந்த இரு மொபைல் மாடல்களையும் எதிர்கொள்ள பிஎஸ்என்எல் போன் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஜியோபோன் போல வரையறுக்கப்பட்ட செயலிகள் மற்றும் சிம் கார்டினை பயன்படுத்தாமல் அனைத்து நெட்வொர்க்கினையும் பயன்படுத்த ஏற்றதாக வந்துள்ளது.

மைக்ரோமேக்ஸ் பாரத் 1 4ஜி போன் அறிமுகம் - பிஎஸ்என்எல் போன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here