ரூ.101-க்கு புதிய விவோ மொபைல் வாங்கலாம்

விவோ நிறுவனம் புதிய வருடம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரூ.101 செலுத்தி புதிய விவோ மொபைல் போனை பெறும் வகையிலான சிறப்பு கடன் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு பஜாஜ் ஃபைனான்ஸ், HDFC, HDB மற்றும் கேபிடல் ஃபர்ஸ்ட் நிதி உதவி வழங்குகின்றது.

விவோ ”நியூ போன் நியூ யூ” திட்டம் டிசம்பர் 20 முதல் ஜனவரி 31, 2019 வரை அனைத்து விவோ ரீடெயிலர்கள் வாயிலாக வழங்கப்பட உள்ளது. இது தொடர்பான முழுமையான விபரத்தை தொடர்ந்து காணலாம்.

1 . நாடு முழுவதும் உள்ள அனைத்து விவோ ரீடெயிலர்களிடம் இந்த திட்டம் கிடைக்கும்.

2. உங்கள் KYC டாக்குமென்ட் (வாக்காளர் அட்டை, பான் கார்டு ஆதார், மேலும் பல)

3.  விவோ நிறுவனம் சலுகை வழங்குகின்ற மொபைல் மாடல்களின் பட்டியல் இதோ பின்வருமாறு ;- Vivo NEX, Vivo V11 Pro, Vivo V11, Vivo Y95, Vivo Y83 Pro, மற்றும் Vivo Y81 (4GB ரேம்)

4. மொபைலை தேர்வு செய்த பின்னர் ரூ.101 செலுத்தி உங்கள் முகவரி தொடர்பான KYC டாக்குமென்டை பதிவு செய்யவும்.

5. நீங்கள் வாங்குகின்ற மொபைல் விலையில் 5 சதவீத சிறப்பு விலை குறைபை தவிர மீதி தொகையை 6 தவனைகளில் திருப்பி செலுத்தும்படி தேர்வு செய்து கொள்ளலாம்.

ரூ.101-க்கு புதிய விவோ மொபைல் வாங்கலாம்

இந்நிறுவனம் வழங்கியுள்ள சிறப்பு சலுகையில் இடம்பெற்றுள்ள மொபைல்களின் விலை ரூ.10,000 மற்றும் அதற்கு கூடுதலாகவே அமைந்திருக்கின்றது.