சீனாவை மையமாக கொண்டு செயல்படும் டாப்வைஸ் நிறுவனத்தின் கோமியோ (comio) ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 18ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகின்றது.
கோமியோ ஸ்மார்ட்போன்
பட்ஜெட் ரகத்தில் உள்ள போட்டியாளர்களுக்கு ஏற்ப ரூபாய் 6,000 கட்டணம் முதல் ரூ.15,000 வரையிலான விலைக்குள் மிகவும் சவாலான வசதிகளை பெற்றதாக போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கோமியோ இந்தியா பிராண்டின் சிஇஓ-வாக நியமிக்கபட்டுள்ள சஞ்சய்குமார் காலிரோனா பிடிஐ-க்கு அளித்த செய்தி குறிப்பில் ரூபாய் 6,000 கட்டணம் முதல் ரூ.15,000 வரையிலான விலைக்குள் ஆஃப்லைன் வாயிலாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. ரூ.500 கோடி வரை அடுத்த இரண்டு ஆண்டுகளில் முதலீடு செய்ய உள்ளதால் புதிய தொழிற்சாலை ஒன்றை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது.