சீனாவை மையமாக கொண்ட செயல்படும் டாப்வைஸ் கம்யூனிகேசன் கோமியோ C1, S1 மற்றும் P1 என மூன்று ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

கோமியோ C1, S1 மற்றும் P1 மொபைல்கள் வெளியானது.!

கோமியோ C1, S1 மற்றும் P1

இந்திய சந்தையில் நுழைந்துள்ள புதிய சீன மொபைல் நிறுவனமாக வந்துள்ள கொமியோ பிராண்டில் பட்ஜெட் ரகத்தில் மூன்று ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

கோமியோ C1, S1 மற்றும் P1 மொபைல்கள் வெளியானது.!

கோமியோ C1

ரூ. 5,999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள கோமியோ C1 மொபைல் போனில் கருப்பு மற்றும் கோல்டு நிறத்துடன் 5 அங்குல உயர்தெளிவுத்திறன் பெற்ற 720×1280 காட்சி தெளிவுத்திறனுடன் கூடிய 1.3GHz மீடியாடெக் செயற்படுத்தி கொண்டு இயக்கப்படுகின்ற சி1 மொபைலில் 1 ஜிபி நினைவகம் பெற்று 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வசதியுடன் 128ஜிபி வரை நீட்டிக்க மைக்ரோ எஸ்டி ஸ்லாட் கொண்டதாக வந்துள்ளது.

கேமரா துறையில் எல்இடி ஃபிளாஷ் பெற்ற 8 மெகாபிக்சல் கேமரா மற்றும் முன்புறத்தில் வீடியோ மற்றும் செல்ஃபீ அழைப்புகளுக்கு 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்துடன் 2,700 mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற கோமியோ C1 கைப்பேசியில் 4G VoLTE, Wi-Fi ஜிபிஎஸ் மற்றும் புளூடூத் ஆகியவற்றை பெற்றுள்ளது.

கோமியோ C1, S1 மற்றும் P1 மொபைல்கள் வெளியானது.!

கோமியோ S1

ரூ. 8,999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள கோமியோ S1 மொபைல் போனில் கருப்பு மற்றும் கோல்டு நிறத்துடன் 5.2 அங்குல உயர்தெளிவுத்திறன் பெற்ற 720×1280 காட்சி தெளிவுத்திறனுடன் கூடிய குவாட்கோர் செயற்படுத்தி கொண்டு இயக்கப்படுகின்ற எஸ்1 மொபைலில் 2 ஜிபி நினைவகம் பெற்று 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வசதியுடன் 128ஜிபி வரை நீட்டிக்க மைக்ரோ எஸ்டி ஸ்லாட் கொண்டதாக வந்துள்ளது.

கேமரா துறையில் எல்இடி ஃபிளாஷ் பெற்ற 13 மெகாபிக்சல் கேமரா மற்றும் முன்புறத்தில் வீடியோ மற்றும் செல்ஃபீ அழைப்புகளுக்கு 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்துடன் 2,700 mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற கோமியோ S1 கைப்பேசியில் கைரேகை ஸ்கேனர், 4G VoLTE, Wi-Fi ஜிபிஎஸ் மற்றும் புளூடூத் ஆகியவற்றை பெற்றுள்ளது.

கோமியோ C1, S1 மற்றும் P1 மொபைல்கள் வெளியானது.!

கோமியோ P1

ரூ. 9,999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள கோமியோ P1 மொபைல் போனில் கிரே மற்றும் கோல்டு நிறத்துடன் 5.5 அங்குல உயர்தெளிவுத்திறன் பெற்ற 1280 x 720 காட்சி தெளிவுத்திறனுடன் கூடிய குவாட்கோர் செயற்படுத்தி கொண்டு இயக்கப்படுகின்ற பி1 மொபைலில் 3 ஜிபி நினைவகம் பெற்று 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வசதியுடன் 128ஜிபி வரை நீட்டிக்க மைக்ரோ எஸ்டி ஸ்லாட் கொண்டதாக வந்துள்ளது.

கேமரா துறையில் எல்இடி ஃபிளாஷ் பெற்ற 13 மெகாபிக்சல் கேமரா மற்றும் முன்புறத்தில் வீடியோ மற்றும் செல்ஃபீ அழைப்புகளுக்கு 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்துடன் 5,000mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற கோமியோ P1 கைப்பேசியில் கைரேகை ஸ்கேனர், 4G VoLTE, Wi-Fi ஜிபிஎஸ் மற்றும் புளூடூத் ஆகியவற்றை பெற்றுள்ளது.

அடுத்த சில வாரங்களுக்கு பரவலாக வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவிலும் ஒரு சில மாதங்களுக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்னணி சில்லறை கடைகளில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here