குறைந்த விலை கூல்பேட் A1, கூல்பேட் மெகா A4 விற்பனைக்கு அறிமுகமானது

சீனாவின் கூல்பேட் நிறுவனம் இந்தியாவில் குறைந்தபட்ச விலையில் அதிகப்படியான வசதிகளை வழங்கி வரும் நிலையில் புதிதாக கூல்பேட் A1, கூல்பேட் மெகா A4 என இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை ரீடெயிலர்கள் வாயிலாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

கூல்பேட் A1, கூல்பேட் மெகா A4

குறைந்த விலை கூல்பேட் A1, கூல்பேட் மெகா A4 விற்பனைக்கு அறிமுகமானது

கூல்பேட் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு மாடல்களை அமேசான் வாயிலாக விற்பனை செய்து வரும் நிலையில் ஆஃப்லைன் சந்தையில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாடு உட்பட 8 மாநிலங்களில் சுமார் 3000 க்கு அதிகமான ரீடெயலர்களிடம் ஏப்ரல் 12 முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

கூல்பேட் ஏ1

ரூ.4,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கூல்பேட் ஏ1 மொபைல் போனில் 5 அங்குல முழு ஹெச்டி காட்சி திரையை கொண்டு 1280 x 720 பிக்சல் தீர்மானத்தை பெற்று குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற மொபைலில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளீட்டு சேமிப்பை கொண்டுள்ளது.

64ஜிபி மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் வழங்கப்பட்டு ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் செயல்படுகின்ற கூல்பேட் ஏ1 மொபைலில் 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் முன்புற கேமரா வழங்கப்பட்டுள்ளது. 2500mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற இந்த மொபைலில் 4ஜி, வை-ஃபை, ப்ளூடூத் 4.0 ஆகியவற்றை பெற்றுள்ளது.

கூல்பேட் மெகா ஏ4

ரூ.5,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கூல்பேட் மெகா ஏ4 மொபைல் போனில் 5 அங்குல முழு ஹெச்டி காட்சி திரையை கொண்டு 1280 x 720 பிக்சல் தீர்மானத்தை பெற்று குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற மொபைலில் 3ஜிபி/2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளீட்டு சேமிப்பை கொண்டுள்ளது.

64ஜிபி மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் வழங்கப்பட்டு ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் செயல்படுகின்ற கூல்பேட் மெகா ஏ4 மொபைலில் 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் முன்புற கேமரா வழங்கப்பட்டுள்ளது. 2000mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற இந்த மொபைலில் 4ஜி, வை-ஃபை, ப்ளூடூத் 4.0 ஆகியவற்றை பெற்றுள்ளது.