கூல்பேட் கூல் 1,நோட் 5, & நோட் 5 லைட் மொபைல்கள் விலை குறைப்புகுறைந்த விலையில் பல்வேறு அம்சங்களை பெற்றதாக விற்பனை செய்யப்பட்டு வரும் கூல்பேட் மொபைல்கள், அதிகபட்சமாக ரூ.4000 வரை விலை கூல்பேட் கூல் 1,நோட் 5, மற்றும் நோட் 5 லைட் ஆகிய மொபைல்கள் குறைக்கப்பட்டுள்ளது.

கூல்பேட் மொபைல் விலை குறைப்பு

கூல்பேட் கூல் 1,நோட் 5, & நோட் 5 லைட் மொபைல்கள் விலை குறைப்பு

இந்தியாவில் அமேசான் இந்தியா இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகின்ற கூல்பேட் மொபைல்களில் கூல்பேட் கூல் 1, கூல்பேட் நோட் 5, மற்றும்  கூல்பேட் நோட் 5 லைட் ஆகிய மொபைல்கள் விலை குறைக்கப்பட்டிருப்பதன் முழுவிபரத்தை அறிந்து கொள்ளலாம்.

கூல்பேட் கூல் 1 ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாடல் விலை ரூ.7,999 கிடைக்கும்.  மேலும் மற்றொரு வேரியன்ட் 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மாடல் ஆனது ரூ.8,999 விலையில் வாங்க கிடைக்கும்.

ரூ.11,999 விலையில் அறிமுகமான கூல்பட் நோட் 5 ஸ்மார்ட்போன்  ரூ.7,999 வாங்கலாம். கூல்பேட் 5 லைட் ஆனது விலைக்குறைப்பிற்கு பின்னர் வெறும் ரூ.5,999 விலையில் கிடைக்க உள்ளது.

கூல்பேட் கூல் 1

5.5 அங்குல திரையை கொண்ட கூல்பேட் கூல் 1 மொபைலில், குவால்காம் ஸ்னாப்டிராகன் 652 சிப்செட் கொண்டதாக 32ஜிபி சேமிப்புடன், பின்புறத்தில் 13 மெகாபிக்சல் சென்சாருடன் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதில் 4,000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

கூல்பேட் நோட் 5

5.5 அங்குல திரையை கொண்ட கூல்பேட் கூல் 1 மொபைலில், குவால்காம் ஸ்னாப்டிராகன் 617 சிப்செட் கொண்டதாக 32ஜிபி சேமிப்புடன், பின்புறத்தில் 13 மெகாபிக்சல் சென்சாருடன் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதில் 4,010mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

கூல்பேட் நோட் 5 லைட்

5 அங்குல திரையை கொண்ட கூல்பேட் நோட் 5 லைட் மொபைலில், மீடியாடெக் MT6735CP சிப்செட் கொண்டதாக 3ஜிபி ரேமுடன் 32ஜிபி/64ஜிபி சேமிப்புடன், பின்புறத்தில் 13 மெகாபிக்சல் சென்சாருடன் முன்புறத்தில் 8 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2,500mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here