ரூ.5,999க்கு டூயல் ரியர் கேமரா கூல்பேட் கூல் 3 மொபைல் அறிமுகம்

கூல்பேட் கூல் 3 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் டூயல் ரியர் கேமரா வசதியுடன் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே வசதி, 3000mAh பேட்டரி, ஃபேஸ் அன்லாக், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு ரூபாய் 5,999 விலையில் விற்பனைக்கு வெளியிடபட்டுள்ளது.

சீனாவின் கூல்பேட் டெக்னாலாஜிஸ் நிறுவனம், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் ரக மொபைல்களை பல்வேறு அம்சங்களை கொண்டதாக தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றது. தற்போது வெளியிடப்பட்டுள்ள கூல் 3 போனில் நீலம், கருப்பு, இன்டிகோ மற்றும் பச்சை என மொத்தம் நான்கு நிறங்களில் கிடைக்க உள்ளது.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்க உள்ள கூல்3 போனில் 5.71 முழுவிஷன் டிஸ்பிளே கொண்டு வாட்டர் டிராப் அம்சத்துடன் 1.3GHz ஆக்டோ கோர் Unisoc  (முன்பு ஸ்பிரெட்டிரம்) சிப்செட் உடன் 2 ஜிபி ரேம் பெற்றுள்ளது. இந்த மொபைலின் உள்ளடக்க மெமரி 16 ஜிபி மற்றும் மைக்ரோ எஸ்டி வாயிலாக 128GB வரை விரிவுப்படுத்திக் கொள்ளலாம்.

கேமரா பிரிவில் பல்வேறு அழகுப்படுத்துதல் முறையுடன் கூடிய 8 மெகாபிக்சல் உடன் கூடிய 0.3 மெகாபிக்சல் என இரு கேமரா சென்சார் உதவிக்கு எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 5 மெகாபிக்சல்  வழங்கப்பட்டுள்ளது.

ரூ.5,999க்கு டூயல் ரியர் கேமரா கூல்பேட் கூல் 3 மொபைல் அறிமுகம்

ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தில் செயல்படுகின்ற கூல்பேட் கூல் 3 மொபைலில் ப்ளூடூத் 4.1, Wi-Fi, 4G VoLTE வசதிகளுடன் 3000mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது. இந்த மொபைலில் ஃபேஸ் அன்லாக் மற்றும் கைரேகை சென்சார் பின்புறத்தில் அமைந்துள்ளது.