கூல்பேட் கூல் 3

பட்ஜெட் விலை மொபைல் தயாரிப்பாளரான கூல்பேட் நிறுவனத்தின், கூல் 3 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.5,999 விலையில் முழுமையான காட்சி திரை கொண்டு 3000mAh பேட்டரி பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வரும் ஜூலை 2 ஆம் தேதி பகல் 12.00 மணிக்கு அமேசான் இந்தியா வைதளத்தில் விற்பனை தொடங்கப்பட உள்ள கூல்பேட் கூல் 3 பிளஸ் மொபைல் 3ஜிபி ரேம் மற்றும் 2 ஜிபி ரேம் என இரு விதமான மாறுபாட்டில் கிடைக்க உள்ளது.

கூல்பேட் கூல் 3 பிளஸ் சிறப்புகள்

5.71-இன்ச் எச்டி + டியூட்ராப் நாட்ச் டிஸ்ப்ளே உடன் 720 x 1520 பிக்சல்கள் மற்றும் 19: 9 ஆஸ்பெக்ட் விகிதம் கொண்டுள்ள கூல் 3 பிளஸ் மொபைல் ஆண்ட்ராய்டு 9.0 (பை) இல் இயங்குகிறது.

இது குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ 22 SoC மூலம் இயக்கப்படுகிறது. 2 ஜிபி / 3 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி / 32 ஜிபி உள் சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மெமரி விரிவாக்கத்திற்கு என மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது. இதில், 13 மெகாபிக்சல் பின்புற கேமராவும், 8 மெகாபிக்சல் முன் கேமராவும் உள்ளன. இது ஃபேஸ் அன்லாக் மற்றும் பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

3000mAh பேட்டரி வசதியுடன் கூடுதலாக இரட்டை 4 ஜி, வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் ஆகியவை பெற்றுள்ளது.

இந்தியாவில் அறிமுகமான 'கூல்பேட் கூல் 3 பிளஸ்' ஸ்மார்ட்போன் விபரம்

இந்தியாவில் ஜூலை 3 முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ள கூல்பேட் கூல் 3 பிளஸ், 2 ஜிபி + 16 ஜிபி வேரியண்டின் விலை ரூ .5,999 எனவும், 3 ஜிபி + 32 ஜிபி வேரியண்ட்டை ரூ .6,499 என விற்பனைக்கு கிடைக்க உள்ளது.