ரூ.14,999 விலையில் டூயல் கேமரா ஆப்ஷனுடன் கூடிய கூல்பேட் கூல் ப்ளே 6 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. பிரத்தியேகமாக செப்டம்பர் 4 முதல் அமேசான் இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

6ஜிபி ரேம் பெற்ற கூல்பேட் கூல் ப்ளே 6 ஸ்மார்ட்போன் வெளியானது.!

கூல்பேட் கூல் ப்ளே 6

பின்புறத்தில் கைரேகை சென்சார் பெற்றுள்ள கூல்பேட் கூல் ப்ளே 6 மொபைல்போனில் இரு டோன் ஃபிளாஷ் வசதியுடன் கூடியதாக 13 மெகாபிக்சல் இரட்டை கேமரா வழங்கப்பட்டுள்ளது.

டிசைன் மற்றும் டிஸ்பிளே

5.5 அங்குல உயர்தெளிவுத்திறன் பெற்ற 1080×1920 காட்சி தெளிவுத்திறன் பெற்றதாக கிடைக்கின்ற கூல்பேட் கூல் பிளே 6 மொபைல்போனில் பின்புறத்தில் இரட்டை கேமரா மற்றும் அதன் கீழ் பகுதியில் கைரேகை சென்சாருடன் தங்க நிற பூச்சு மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் கிடைக்க பெற உள்ளது.

6ஜிபி ரேம் பெற்ற கூல்பேட் கூல் ப்ளே 6 ஸ்மார்ட்போன் வெளியானது.!

பிராசஸர் மற்றும் ரேம்

1.4GHz ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 652 செயற்படுத்தி கொண்டு இயக்கப்படுகின்ற கூல் ப்ளே 6 மொபைலில் 6ஜிபி ரேம் வழங்கப்பட்டு 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. மெமரிகார்டு ஸ்லாட் வழங்கப்பபடவில்லை.

கேமரா துறை

ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தினை பின்னணியாக கொண்டு இயங்குகின்ற கூல் பிளே 6 மொபைலில் இரட்டை டோன் எல்இடி ஃபிளாஷ், PDAF, f/2.0 ஆகியவற்றுடன் 13 மெகாபிச்கல் இரட்டை கேமரா பெற்றுள்ளது.

முன்புறத்தில் செல்ஃபீ மற்றும் காணொலி அழைப்புகளை எதிர்கொள்ள f/2.2 பெற்ற 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

6ஜிபி ரேம் பெற்ற கூல்பேட் கூல் ப்ளே 6 ஸ்மார்ட்போன் வெளியானது.!

பேட்டரி

300 மணி நேரம் ஸ்டேன்ட் பை டைம் பெற்ற 4,000mAh பேட்டரி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகின்றது.

மற்றவை

இரு சிம் கார்டு ஆதரவு, யூஎஸ்பி டைப் சி, வை-ஃபை , புளூடூத் மற்றும் 4ஜி எல்டிஇ ஆகியவற்றுடன் ஆதரவினை பெற்றுள்ளதாக வந்துள்ளது.

6ஜிபி ரேம் பெற்ற கூல்பேட் கூல் ப்ளே 6 ஸ்மார்ட்போன் வெளியானது.!

விலை

இரட்டை கேமரா பெற்ற கூல்பேட் கூல் ப்ளே 6 ஸ்மார்ட்போன் விலை ரூ.14,999 மட்டுமே ஆகும்.

எங்கே வாங்கலாம்

வருகின்ற செப்டம்பர் 4ந் தேதி அமேசான் இணையதளத்தில் மட்டுமே பிரத்தியேகமாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here