குறைந்த விலையில் மூன்று மொபைல்கள் அறிமுகம் செய்த கூல்பேட்

கூல்பேட் நிறுவனம் குறைந்த விலையில், பல்வேறு வசதிகளை வழங்கும் கூல்பேட் மெகா வரிசையில் கூல்பேட் மெகா 5, கூல்பேட் மெகா 5M, மற்றும் கூல்பேட் மெகா 5C என மூன்று மொபைல்களை ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்ய உள்ளது.

கூல்பேட் மெகா 5

குறைந்த விலையில் பல்வேறு வசதிகளை வழங்கும் வகையிலான கூல்பேட் மெகா 5 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச 1440×720 பிக்சல் ஹெச்.டி.  திரையை பெற்று 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே பாதுகாப்பு வசதியுடன், 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸரை பெற்று 3 ஜி.பி. ரேம் மற்றும் 32 ஜி.பி. உள்ளீட்டு சேமிப்பை கொண்டதாக விளங்குகின்றது.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றிய மெகா 5 மொபைலில் இரட்டை சிம் கார்டு, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட அம்சங்களுடன், பின்புறத்தில் இரட்டை கேமரா கொண்டு 13 எம்.பி. பிரைமரி கேமரா மற்றும் 0.3 எம்.பி. வி.ஜி.ஏ என இரண்டுடன் எல்இடி ஃபிளாஷ் கொண்டுள்ளது. முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்பை மேற்கொள்ள 5 எம்.பி. செல்ஃபி கேமரா உடன் 3,000mAh பேட்டரி பெற்று நீலம், தங்கம், மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கும்.

கூல்பேட் மெகா 5 ஸ்மார்ட்போன் விலை ரூ.6,999

குறைந்த விலையில் மூன்று மொபைல்கள் அறிமுகம் செய்த கூல்பேட்

கூல்பேட் மெகா 5C

கூல்பேட் மெகா 5சி ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச  ஹெச்.டி.  திரையை பெற்று 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் சிப்செட் பிராசஸரை பெற்று 1 ஜி.பி. ரேம் மற்றும் 16 ஜி.பி. உள்ளீட்டு சேமிப்பை கொண்டதாக விளங்குகின்றது.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றிய மெகா 5சி மொபைலில் இரட்டை சிம் கார்டு, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ் உள்ளிட்ட அம்சங்களுடன், பின்புறத்தில் கொண்டு 5 எம்.பி. பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ் கொண்டுள்ளது. முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்பை மேற்கொள்ள 5 எம்.பி. செல்ஃபி கேமரா உடன் 2,500mAh பேட்டரி பெற்று நீலம், தங்கம், மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கும்.

கூல்பேட் மெகா 5C ஸ்மார்ட்போன் விலை ரூ.4,499

கூல்பேட் மெகா 5M

கூல்பேட் மெகா 5M ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச  ஹெச்.டி.  திரையை பெற்று 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் சிப்செட் பிராசஸரை பெற்று 1 ஜி.பி. ரேம் மற்றும் 16 ஜி.பி. உள்ளீட்டு சேமிப்பை கொண்டதாக விளங்குகின்றது.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றிய மெகா 5சி மொபைலில் இரட்டை சிம் கார்டு, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ் உள்ளிட்ட அம்சங்களுடன், பின்புறத்தில் 5 எம்.பி. பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ் கொண்டுள்ளது. முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்பை மேற்கொள்ள 5 எம்.பி. செல்ஃபி கேமரா உடன் 2,000mAh பேட்டரி பெற்று நீலம், தங்கம், மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கும்

கூல்பேட் மெகா 5M ஸ்மார்ட்போன் விலை ரூ.3,999