தீபாவளி பண்டிகையின் போது அதிகளவில் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் எவை?

தீபாவளி பண்டிகையின் போது அதிகளவில் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியலில், மூன்று முன்னணி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. தீபாவளி பண்டிகை காலமான அக்டோபர் 9 முதல் நவம்பர் 8-ம் தேதி வரை, நடந்த ஸ்மார்ட் போன் விற்பனையை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 26 சதவிகித உயர்ந்துள்ளதாகவும், இதில் சியோமி, சாம்சங் மற்றும் ரியல்மீ ஸ்மார்ட்போன்களே அதிகளவில் விற்பனையாகியுள்ளன என்றும் இதுகுறித்து வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்கெட் பிளஸ் என்ற ஆராய்ச்சி நிறுவனம் இதுகுறித்து நடத்திய ஆய்வில், அமேசான், இந்தியா மற்றும் பிளிகார்ட் சிரீஸ் மற்றும் எம்ஐ.காம் ஆகியவற்றில் தீபாவளி ஸ்மார்ட் போன்கள் விற்பனை அதிகரித்துள்ளதற்கு காரணம், இந்த இணைய தளங்களில் வழங்கப்பட்ட டிஸ்கவுண்ட்களே ஆகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையின் போது அதிகளவில் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் எவை?

மேலும் அந்த ஆய்வில், தீபாவளி விழாகால சீசனில், சியோமி, சாம்சங் மற்றும் ரியல்மீ போன்களே 57 சதவிகி அளவில் விற்பனை ஆகியுள்ளது. புதிதாக அறிமுகமான ரியல்மீ இந்தயாவில் இந்த கால கட்டத்தில் 9 சதவிகிதம் விற்பனையாகியுள்ளது. ஹவாய் மற்றும் விவோ ஸ்மார்ட் போன்கள் ஆப்லைன் சேனலில் தங்கள் விற்பனையை உறுதி செய்துள்ளனர்.