Home Tech News Mobiles ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் ரூ.30,000 விலைக்குள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நார்டு மொபைல் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் குவாட் கேமரா செட்டப் மற்றும் முன்புறத்தில் டூயல் செல்ஃபீ கேமரா பெற்றதாக அமைந்துள்ளது.

விற்பனை விபரம்

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள நார்டு மொபைல் விற்பனைக்கான ப்ரீ புக்கிங் அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இணையதளத்தில் நடைபெற்று வரும் நிலையில் விற்பனைக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் கிடைக்க உள்ளது. இதன் குறைந்த விலை வேரியண்ட் செப்டம்பர் முதல் அறிமுகம் செய்யப்படலாம்.

ஒன்பிளஸ் நார்டு சிறப்புகள்

6.44 அங்குல FluidAMOLED டிஸ்பிளேவுடன் 90Hz ரிஃபெரஷ் ரேட் கொண்டு 20:9 ஆஸ்பெக்ட் விகிதம், FHD+ உடன் கிளாஸை பாதுகாக்க கார்னரிங் கொரில்லா கிளாஸ் 5 அம்சத்தை கொண்டுள்ள ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 765G உடன் Adreno 620 GPU கொண்டு அதிகபட்சமாக 12GB LPDDR4X ரேம் உடன் 256GB UFS 2.1 சேமிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை பின்பற்றி ஆக்ஸிஜன் ஓ.எஸ் 10.5 கொண்டு செயல்பட்டு ப்ளூ மார்பிள் மற்றும் கிரே என இரு நிறங்களை கொண்டுள்ளது.

நார்டு கேமரா வசதிகள்

பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள நார்டு மொபைலின் பிரைமரி கேமராவில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா சோனி ஐ.எம்.எக்ஸ் 586 சென்சார் மூலம் இரட்டை எல்இடி ஃபிளாஷ் கொண்டுள்ளது. அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் 8 மெகாபிக்சல் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமராவை பெறலாம்.

முன்புறத்தில், செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு சோனி ஐ.எம்.எக்ஸ் 616 சென்சார் ஆதரவுடன் கூடிய 32 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் சென்சார் கொண்டுள்ளது.

கூடுதல் வசதிகள்

5ஜி/4ஜி தொடர்பு, இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர், ஃபேஸ் அன்லாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், இரட்டை நானோ சிம் கார்டு ஸ்லாட் மற்றும் அலெர்ட் ஸ்லைடர் ஆகியவை கொண்டுள்ளது. ப்ளூடூத் 5.1, என்.எஃப்.சி, ஜிபிஎஸ் உடன் NAVIC, மற்றும் வைஃபை ஆகியவற்றை கொண்டுள்ள ஒன்பிளஸ் நார்டு மொபைலில் விரைவு சார்ஜ் வசதி ராப் 30T ஆதரவுடன் 4,115 எம்.ஏ.எச் பேட்டரியில் இயங்குகிறது.

ஒன்பிளஸ் நார்டு விலை பட்டியல்

மூன்று விதமான ரேம் ஆப்ஷனை பெற்றுள்ள ஒன்பிளஸ் நார்டு மொபைல் விலை பின் வருமாறு ;-

OnePlus Nord 6GB RAM+64GB – ரூ.24,999

OnePlus Nord 8GB RAM+64GB – ரூ.27,999

OnePlus Nord 12GB RAM+64GB – ரூ.29,999

விற்பனை அறிமுக சலுகையாக இந்த மொபைலுக்கு ஜியோ நிறுவனம் மூலம் ரூ.6,000 மதிப்புள்ள சலுகைகளை, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு மூலமாக ரூ.2,000 மதிப்புள்ள சலுகைகளை பெறலாம்.

 

Exit mobile version