ஜியோவில் ₹43,574 கோடியை முதலீடு செய்த ஃபேஸ்புக்

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜியோ பிளாட்ஃபாரத்தில் ₹43,574 கோடியை நேரடியாக முதலீட்டை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் ஜியோ நிறுவனத்தின் 9.99 % பங்குகளை ஃபேஸ்புக் கையகப்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் முதலீடு செய்துள்ள பண மதிப்பு ஜியோவின் முன் மதிப்பு முதலீட்டின் மதிப்பான ரூ.4.62 லட்சம் கோடியில் , மேற்கொண்டுள்ள முதலீட்டின் படி ரூ.43,574 கோடியின் மதிப்பாக இந்நிறுவன பங்கில் 9.99 சதவீதத்தை கையகப்படுத்தியுள்ளது.

388 மில்லியன் வாடிக்கையாளர்ளை பெற்றுள்ள ஜியோ நாட்டின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக விளங்குகுவதுடன், டிஜிட்டல் சார்ந்த சேவைகளில் பல்வேறு சேவைகளை வழங்கி வருவது குறிப்படதக்கதாகும்.

பிராட்பேண்ட், ஸ்மார்ட்  கருவிகள், கிளவுட் மற்றும் எட்ஜ் கம்ப்யூட்டிங், டேட்டா அனலிட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், ஆக்மென்ட் மற்றும் மிக்ஸ்டு ரியாலிட்டி மற்றும் பிளாக்செயின் போன்ற முன்னணி தொழில்நுட்பங்களால் இயங்கும் உலகத் தரம் வாய்ந்த டிஜிட்டல் தளத்தை ஜியோ உருவாக்கியுள்ளது.

அன்னிய நேரடி முதலீடு

பேஸ்புக் மற்றும் ஜியோ இடையேயான இந்த கூட்டணி வாயிலாக, உலகில் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தால் சிறுபான்மை பங்குகளுக்கான மிகப்பெரிய முதலீடு மற்றும் இந்தியாவில் தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய அன்னிய நேரடி முதலீடு ஆக உள்ளது.