பிளிப்கார்டில் மகளிர் தினத்தை முன்னிட்டு 75 % தள்ளுபடி அறிவிப்பு

Flipkart Women’s Day Sale: இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் வலைதளமான பிளிப்கார்ட், மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை அதிகபட்சமாக 75 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறும் என அறிவித்துள்ளது.

ஆன்லைனில் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், டேப்லெட் போன்ற அனைத்து எலக்ட்ரானிக்ஸ் உட்பட பல்வேறு பொருட்களுக்கு விலைகுறைப்பு என அறிவித்துள்ளது. குறிப்பாக ஸ்மார்ட் டிவிகளுக்கு மட்டும் அதிகபட்சமாக 75 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்க உள்ளது.

ஸ்மார்ட் டிவிகள்:

பிளிப்கார்ட்டின் சிறப்பு மகளிர் தினத்தை முன்னிட்டான விற்பனையில் குறிப்பாக எல்இடி ஸ்மார்ட் டிவி தயாரிப்பாளர்களான பிலிப்ஸ், மற்றும் வியூ மாடல்களில் அதிகபட்ச தள்ளுபடியை அறிவித்துள்ளது. குறிப்பாக வியூ 43 அங்குல எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலை ரூபாய் 17,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மார்கியூ நிறுவனத்தின் 43 அங்குல, 32 அங்குல, 40 அங்குல ஸ்மார்ட் டிவி மாடல்களை ரூபாய் 20,000 விலைக்குள் வாங்க முடியும்.

ஸ்மார்ட்போன் தள்ளுபடி விபரம்:

சாம்சங், சியோமி, ஒப்போ, விவோ மற்றும் அசுஸ் போன்ற முன்னணி நிறுவனங்களில் கிடைக்கின்ற ஸ்மார்ட்போன் மாடலைகளில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் தின சிறப்பு தள்ளுபடி விற்பனையில் 50 சதவீதம் முதல் 75சதவீதம் வரை விலைகுறைப்பில் வாங்க முடியும் என்று பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்தள்ளது.

வீட்டு உபோயக மின்னணு பொருட்கள்

சியோமி, அசுஸ், டெல், ஹெச்பி போன்ற நிறுவனங்களின் லேப்டாப் மாடல்களுக்கும் 75 சதவீதம் விலைகுறைப்பு தவிர வாஷிங் மெசின், கேமரா, டேப்லெட், உட்பட வீட்டு உபயோகமாக மின்னணு பொருட்களுக்கும் விலைகுறைக்கப்பட்டுள்ளது.