சாம்சங் கேலக்ஸி M சீரிஸ் மொபைல்களில் எந்த ஸ்மார்ட்போன் வாங்கலாம் என்ற குழப்பத்துக்கு தீர்வாக சாம்சங் கேலக்ஸி M10 Vs சாம்சங் கேலக்ஸி M20 Vs சாம்சங் கேலக்ஸி M30 மூன்று மொபைல்களையும் ஒப்பீட்டு வித்தியாசங்கள் மற்றும் வசதிகளை அறியலாம்.
பட்ஜெட் விலையில் பல்வேறு சிறப்புகளை பெற்றதாக வந்துள்ள கேலக்ஸி எம் சீரிஸ் போனில் குறிப்பாக விற்பனைக்கு வந்த வரையில் டாப் மாடலாக கேலக்ஸி எம்30 போன் விளங்குகின்றது. இந்த போனில் மூன்று கேமராவுடன் 5000mAh பேட்டரியை பெற்றதாக உள்ளது.
சாம்சங் கேலக்ஸி M10 Vs கேலக்ஸி M20 Vs கேலக்ஸி M30
முன்பாக வெளியிப்பட்ட கேலக்ஸி எம்10 மற்றும் கேலக்ஸி எம்20 ஒப்பீட்டை நாம் முன்பே வெளியிட்டிருந்த நிலையில், தற்போது மூன்று மாடல்களுக்கான ஒற்றுமை மற்றும் வேற்றுமை முக்கிய வசதிகளை வழங்கும் வகையில் தொகுத்துள்ளோம்.
டிஸ்பிளே மற்றும் பிராசஸர்
தொடக்கநிலை கேலக்ஸி எம்10 போனில் 6.22 அங்குல ஹெச்டி பிளஸ் திரையும், மற்ற இரு மொபைல்களும் முழு ஹெச்டி பிளஸ் பெற்று 6.3 அங்குல கேலக்ஸி M20 டிஸ்பிளே மற்றும் 6.4 அங்குல AMOLED கேலக்ஸி எம்30 டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
மூன்று மொபைல்களிலும் தனது சொந்த எக்ஸ்னோஸ் சிப்செட்டை பொருத்தியுள்ளது. இதில் கேலக்ஸி எம்20 மற்றும் கேலக்ஸி எம்30 போன்களில் Exynos 7904 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. கேலக்ஸி எம்10 போனில் மட்டும் Exynos 7870 சிப் செட் உடன் 2 ஜிபி ரேம் மற்றும் 3 ஜிபி ரேம் கொண்டுள்ளது.
கேமரா
பொதுவாக கேலக்ஸி எம்10 மற்றும் கேலக்ஸி எம்20 போன்களில் டூயல் கேமரா செட்டப் இடம்பெற்றுள்ளது. இதில் கேலக்ஸி M30 மாடலில் மட்டும் மூன்று கேமரா செட்டப் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது.
செல்ஃபீ மற்றும் வீடியோ காலிங் என இரண்டுக்கும் பொதுவாக கேலக்ஸி எம்30 போனில் 16எம்பி, கேலக்ஸி எம்20 போனில் 8எம்பி மற்றும் கேலக்ஸி M10 போனில் மட்டும் 5எம்பி வழங்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி M30 Vs கேலக்ஸி M20 Vs கேலக்ஸி M10 – வித்தியாசம்
நுட்பம் | சாம்சங் கேலக்ஸி M10 | சாம்சங் கேலக்ஸி M20 | சாம்சங் கேலக்ஸி M30 |
டிஸ்பிளே | 6.22-inch HD+ இன்ஃபினிட்டி V டிஸ்பிளே | 6.3-inch FHD+இன்ஃபினிட்டி V டிஸ்பிளே | 6.4-inch HD+ இன்ஃபினிட்டி U டிஸ்பிளே |
பிராசஸர் | 1.6GHz ஆக்டோ-கோர் Exynos 7870 | 1.8Ghz ஆக்டோ-கோர் Exynos 7904 | 1.8Ghz ஆக்டோ-கோர் Exynos 7904 |
ரேம் | 2GB மற்றும் 3GB ரேம் | 3GB மற்றும் 4GB ரேம் | 4GB மற்றும் 6GB ரேம் |
சேமிப்பு | 16GB மற்றும் 32GB | 32GB மற்றும் 64GB | 64GB மற்றும் 128GB |
ரியர் கேமரா | 13MP கேமரா f/1.9 & 5MP கேமரா 120 டிகிரி அல்ட்ரா வைட் ஏங்கிள் | 13MP கேமரா f/1.9 & 5MP கேமரா 120 டிகிரி அல்ட்ரா வைட் ஏங்கிள் | 13MP கேமரா f/1.9 & 5MP கேமரா + 5MP கேமரா 120 டிகிரி அல்ட்ரா வைட் ஏங்கிள் |
முன் கேமரா | 5MP f/2.0 இன் டிஸ்பிளே ஃபிளாஷ் | 8MP f/2.0 இன் டிஸ்பிளே ஃபிளாஷ் | 16MP f/2.0 இன் டிஸ்பிளே ஃபிளாஷ் |
பேட்டரி | 3400mAh (Gadgets Tamilan) | 5000mAh | 5000mAh |
ஓஎஸ் | ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ | ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ | ஆண்ட்ராய்டு 8.1 |
நிறம் | நீலம் மற்றும் கருப்பு | நீலம் மற்றும் கருப்பு | நீலம் மற்றும் கருப்பு |
விலை | 2GB+16GB -ரூ.7,990 & 3GB+32GB – ரூ.8,990 | 3GB+32GB -ரூ.10,990 & 4GB+64GB – ரூ.12,990 | 4GB+64GB -ரூ.14,990 & 6GB+128GB – ரூ.17,990 |
அமேசான் மற்றும் சாம்சங் இணையதளம் மூலம் விற்பனை செய்யப்படுகின்றது.