ஆப்பிள் ஐபோனுக்கு ஆப்பு வைத்த குவால்காம்

ஜெர்மனி நாட்டில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7, 7 ப்ளஸ், 8, 8 ப்ளஸ் மற்றும் ஐபோன் X மொபைல்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹார்டுவேர் சார்ந்த காப்புரிமை ஒன்றை மீறியதற்கு குவால்காம் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.

மென்பொருள் காப்புரிமை மீறல், ஹார்டுவேர் காப்புரிமை மீறல் என பல்வேறு நாடுகளில் ஆப்பிள் நிறுவனம் மீது முன்னணி சிப்செட் தயாரிப்பாளரான குவால்காம் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் சமீபத்தில் சீனாவில் மென்பொருள் சார்ந்த காப்புரிமை மீறலுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், ஐபோன்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்குப் மாற்றாக ஐபோன்களின் மென்பொருளில் சில திருத்தங்களைச் செய்து நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தியது.

ஆனால் இந்த முறை ஜெர்மனி நாட்டில் ஹார்டுவேர் தொடர்பான காப்புரிமை மீறலுக்கான வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக ஜெர்மனி நாட்டின் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. எனவே, ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 7, 7 ப்ளஸ், 8, 8 ப்ளஸ் மற்றும் ஐபோன் X ஆகியவற்றின் விற்பனை பாதிக்கப்படும். ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் நேரடியான விற்பனை நிலையங்கள் அல்லாமல் மூன்றாம் தரப்பினர் வாயிலாக தொடர்ந்து இந்த மொபைல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.