ரூ.5,999க்கு ஜியோனி மேக்ஸ் மொபைல் விற்பனைக்கு வெளியானது

பட்ஜெட் விலையில் மிக சிறப்பான 5,000mAh பேட்டரி பெற்ற ஜியோனி மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் ரூ.5,999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு, ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோனி மொபைல் நிறுவனத்தை இந்தியாவைச் சேர்ந்த கார்பன் மொபைல்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஜெயினா குழுமம் கையகப்படுத்தியதை தொடர்ந்து சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் ஜியோனி பிராண்டில் மொபைல் விற்பனை துவங்கப்பட்டுள்ளது.

ஜியோனி மேக்ஸ் மொபைல் சிறப்புகள்

ஜியோனி மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.1 அங்குல எச்டி + டிஸ்ப்ளே உடன் 2.5டி வளைந்த கிளாஸ் பாதுகாப்பினை பெற்று 720 × 1,560 பிக்சல்ஸ் மற்றும் 20:9 விகிதத்தை கொண்டுள்ளது. இந்த மொபைலில் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பை பெற்று ஆக்டா கோர் யுனிசாக் 9863ஏ மூலம் இயக்கப்படுகின்றது. கடுதலாக விரிவாக்கக்கூடிய 256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டுக்கு ஆதரவு உள்ளது.

கேமரா பிரிவில், இரட்டை கேமரா செட்டபுடன் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் பொக்கே லென்ஸ் உள்ளது. முன்பக்கத்தில், 5 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கிடைக்கிறது.

5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ள ஜியோனி மேக்ஸில் 10W சார்ஜிங் திறனில் மற்றொரு தொலைபேசியை சார்ஜ் செய்ய ரிவர்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. 4 ஜி வோல்டிஇ, புளூடூத் 4.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் கருப்பு, சிவப்பு மற்றும் ராயல் ப்ளூ நிறத்தில் கிடைக்கும்.