ஜியோனி S11 லைட், ஜியோனி F205 , ஜியோனி A1 லைட் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

சீனாவை தலைமையிடமாக கொண்ட ஜியோனி நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் ஜியோனி S11 லைட், ஜியோனி F205 , ஜியோனி A1 லைட் என்ற மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மூன்று மொபைல்களும் பிளிப்கார்டில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

ஜியோனி S11 லைட்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட் கொண்டு 4ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளீட்டு சேமிப்பை பெற்ற ஜியோனி எஸ்11 லைட் மாடல் 5.7 அங்குல ஹெச்டி திரையை பெற்று 1440×720 பிக்சல் தீர்மானத்தை பெற்ற இந்த மொபைல் போனில் பின்புறத்தில் இரட்டை கேமரா பெற்று 13 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் கொண்டு முன்புறத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 16 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டு அதிகபட்சமாக 256 ஜிபி மைக்ரோ எஸ்டி அட்டையை பயன்படுத்தலாம். இந்த மொபைல் 3,030mAh பேட்டரி திறனுடன் 4ஜி VoLTE, ப்ளூடூத் v4.2, Wi-Fi, GPS ஆகியவற்றுடன் தங்கம், நீலம், கருப்பு போன்ற நிறங்களில் கிடைக்கும்.

ஜியோனி S11 லைட் ஸ்மார்ட்போன் விலை ரூ. 10,999

ஜியோனி F205

அடுத்து வெளியிடப்பட்டுள்ள பட்ஜெட் ரக ஜியோனி F205 ஸ்மார்ட்போனில் 5.45 அங்குல திரையை பெற்று 1440×720 பிக்சல் தீர்மானத்தை பெற்ற இந்த மொபைல் போனில் பின்புறத்தில்  கேமரா பெற்று 8 மெகாபிக்சல் மற்றும் முன்புறத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டு மீடியாடெக் MT6739 SoC உடன் 2ஜிபி ரேம் 16 ஜிபி உள்ளீட்டு சேமிப்புடன் அதிகபட்சமாக 256 ஜிபி மைக்ரோ எஸ்டி அட்டையை பயன்படுத்தலாம். இந்த மொபைல் 2,670mAh பேட்டரி திறனுடன் 4ஜி VoLTE, ப்ளூடூத் v4.2, Wi-Fi, GPS ஆகியவற்றுடன் தங்கம், கருப்பு போன்ற நிறங்களில் கிடைக்கும்.

ஜியோனி F205 லைட் ஸ்மார்ட்போன் விலை ரூ. 5,699

ஜியோனி S11 லைட், ஜியோனி F205 , ஜியோனி A1 லைட் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

ஜியோனி A1 லைட்

ஜியோனி A1 லைட் ஸ்மார்ட்போனில் 5.3 அங்குல திரையை பெற்று 1280×720 பிக்சல் தீர்மானத்தை பெற்ற இந்த மொபைல் போனில் பின்புறத்தில் கேமரா பெற்று 13 மெகாபிக்சல் மற்றும் முன்புறத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 20 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டு மீடியாடெக் MT6753V SoC உடன் 3 ஜிபி ரேம் 32 ஜிபி உள்ளீட்டு சேமிப்புடன் அதிகபட்சமாக 256 ஜிபி மைக்ரோ எஸ்டி அட்டையை பயன்படுத்தலாம். இந்த மொபைல் 4,000mAh பேட்டரி திறனுடன் 4ஜி VoLTE, ப்ளூடூத் v4.2, Wi-Fi, GPS ஆகியவற்றுடன் தங்கம், கருப்பு போன்ற நிறங்களில் கிடைக்கும்.

ஜியோனி A1 லைட் ஸ்மார்ட்போன் விலை ரூ. 7,490

ஜியோனி S11 லைட், ஜியோனி F205 , ஜியோனி A1 லைட் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்