Google Pixel 3a

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3 ஸ்மார்ட்போன் அடிப்படையிலான குறைந்த விலை கூகுள் பிக்சல் 3a விபரங்கள் கசிந்துள்ளன. இதன் மூலம் பிக்சல் 3ஏ மொபைல் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து பல்வேறு தகவல்கள் முன்பாக வெளிவந்த நிலையில் தற்போது மிகப்பெரிய தேடுதல் தளம் தனது பக்கத்தில் தவறுதாக வெளியிட்ட தகவலின் அடிப்படையில் புதிய பிக்சல் 3a மற்றும் பிக்சல் 3a XL  என இரு மாடல்கள் மே மாதம் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது.

பிக்சல் 3a போனின் முக்கிய விபரங்கள்

பிக்சல் 3 மாடலின் சிறிய ரக ஸ்மார்ட்போனாக இருக்கும் என கருதப்படுகின்ற இந்த மாடலானது. கூகுள் ஸ்டோர் வலைதளத்தில் பிக்சல் 3A என்ற பெயரில் தவறுதலாக பட்டியலிடப்பட்டு, பின் நீக்கப்பட்டு விட்டது.

கூகுள் நிறுவனம் 2019 I/O நிகழ்வை மே மாதம் 7-9 வரை நடத்த திட்டமிட்டுள்ளதால் இந்த நிகழ்வில் புதிய ஆண்ட்ராய்டு Q இயங்குதளம் உட்பட பல்வேறு வசதிகள் மற்றும் முக்கிய அறிவிப்புகளுடன் பிக்சல் மொபைல்கள் வெளியிட உள்ளது.

ஸ்னாப்டிராகன் 670 மாடல் பிராசஸர்கள் வழங்கப்படும் உள்ள இரு மாடல்களிலும் 5.6 இன்ச் மற்றும் 6.0 இன்ச் OLED டிஸ்ப்ளே, 12 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கருதப்படுகின்றது.