இன்று கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன் அறிமுகம்இன்றைக்கு புதிய ஃபிளாக்‌ ஷீப் கில்லர் மாடலாக ஐபோன் 8 மற்றும் கேலக்ஸி 8 ஆகியவற்றை எதிர்கொள்ள கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.

கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL

இன்று கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன் அறிமுகம்

 

Ask more of your phone என்ற கோஷத்துடன் வெளியிடப்பட்டுள்ள டீசரில் அக்டோபர் 4ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதாக உறுதிப்படுத்தியுள்ளது.

4.99 அங்குல திரையை கொண்ட பிக்சல் 2 மொபைல் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டிருக்கலாம். அதேபோல இதன் மேம்பட்ட பிக்சல் 2 எக்ஸ்எல் மொபைலில் 5.99 அங்குல திரையை கொண்ட 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டிருக்கலாம். கூடுதலாக மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட்டில் 128ஜிபி திறன் கொண்டதாக இருக்கலாம்.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை பின்னணியாக கொண்ட பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 எக்ஸ்எல் ஆகிய மொபைல்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் அல்லது ஸ்னாப்டிராகன் 836 சிப்செட் கொண்டதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன் அறிமுகம்

IP67 அல்லது IP68 தரச்சான்றிதழ் தூசு , வாட்டர் ப்ரூஃப் ஆகியவற்றை தாங்கும் திறன் கொண்டதாக இருக்கலாம். பிக்சல் 2 மொபைல் போனை ஹெச்டிசி நிறுவனமும், பிக்சல் 2 எக்ஸ்எல் மொபைல் போன் எல்ஜி நிறுவனம் தயாரிக்கலாம்.

வருகின்ற அக்டோபர் 19ந் தேதி முதல் பல்வேறு முன்னணி நாடுகளில் இரண்டு பிக்சல் மொபைல்களும் டெலிவரி தொடங்கப்படலாம்.

இன்று கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன் அறிமுகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here