கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL விற்பனைக்கு அறிமுகம்இந்த வருடத்தின் மற்றொரு பிளாக் ஷீப் கில்லர் மாடலாக கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரு பிக்சல் வரிசை மொபைல் போன்களும் 4ஜிபிரேம் பெற்றதாக வந்துள்ளது.

கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL

கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவில் பிக்சல் 2, பிக்சல் 2 XL ஆகிய இரு மாடல்களும் அக்டோபர் 26ந் தேதி முதல் முன்பதிவு தொடங்கப்பட்டு நவம்பர் 1ந் தேதி முதல் டெலிவரி தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் 1000க்கு அதிகமான ஆஃப்லைன் ஸ்டோர்கள் மற்றும் ஆன்லைன் இ-காமர்ஸ் ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் X ஆகியவற்றுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 8 போன்ற மாடல்களை விட குறைந்த விலையில் அதிநவீன அம்சங்களை பெற்றதாக வெளியாகியுள்ளது.

கூகுள் பிக்சல் 2 சிறப்பம்சங்கள்

பிக்சல் 2 மொபைல் போன் 5 அங்குல சினிமேட்டிக் 127-mm முழு எச்டி திரையுடன் 1080×1920 பிக்சல் தீர்மானத்துடன் , இதன் கிளாஸ் 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சத்தை பெற்றதாக வந்துள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டு 4ஜிபி ரேம் பெற்றதாக வந்துள்ள பிக்சல் 2 போன் 64ஜிபி மற்றும் 128ஜிபி ஆகிய இருவிதமான சேமிப்புடன் கிடைக்க உள்ளது.

கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL விற்பனைக்கு அறிமுகம்

ஆண்ட்ராய்டு ஓரியோ கொண்டு இயக்கப்படுகின்ற பிக்சல் 2 மொபைல் 2700 mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுவதுடன் மிக நவீன நுட்பத்துடன் கூடிய ஒற்றை பின்புற 12.2 கேமரா சென்சார் மிகவும் உயர்தரமான படங்களை பெறும் வகையில் f/1.8 , எலக்ட்ரானிக் இமேஜ் ஆப்ட்டிமேஷன் பெற்றதாகவும் வந்துள்ளது. முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள f/2.4 பெற்ற 8 மெகாபிக்சல் சென்சார் கேமரா இடம் பெற்றுள்ளது.

இந்த மொபைலில் இடம்பெற்றுள்ள கேமரா DxOMark தர மதீப்பிட்டில் அதிகபட்ச மதிப்பீடாக 98 பெற்றுள்ளது. பிக்ஸல் 2 மொபைல் நீலம், கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய மூன்று நிறங்களுடன் கிடைக்க உள்ளது.

கூகுள் பிக்சல் 2 XL சிறப்பம்சங்கள்

பிக்சல் 2 XL மொபைல் போன் 6.0 அங்குல QHD+ திரையுடன் 2880 x 1440 பிக்சல் தீர்மானத்துடன் P-OLED கொண்டதாக உள்ள, இதன் கிளாஸ் 3D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சத்தை பெற்றதாக வந்துள்ளது.

கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL விற்பனைக்கு அறிமுகம்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டு 4ஜிபி ரேம் பெற்றதாக வந்துள்ள பிக்சல் 2 XL போன் 64ஜிபி மற்றும் 128ஜிபி ஆகிய இருவிதமான சேமிப்புடன் கிடைக்க உள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ கொண்டு இயக்கப்படுகின்ற பிக்சல் 2 மொபைல் 3520 mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுவதுடன் மிக நவீன நுட்பத்துடன் கூடிய ஒற்றை பின்புற 12.2 கேமரா சென்சார் மிகவும் உயர்தரமான படங்களை பெறும் வகையில் f/1.8 , எலக்ட்ரானிக் இமேஜ் ஆப்ட்டிமேஷன் பெற்றதாகவும் வந்துள்ளது. முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள f/2.4 பெற்ற 8 மெகாபிக்சல் சென்சார் கேமரா இடம் பெற்றுள்ளது.

இந்த மொபைலில் இடம்பெற்றுள்ள கேமரா DxOMark தர மதீப்பிட்டில் அதிகபட்ச மதிப்பீடாக 98 பெற்றுள்ளது. பிக்ஸல் 2 எக்ஸ்எல் மொபைல் கருப்பு மற்றும் கருப்பு வெள்ளை ஆகிய இரு நிறங்களுடன் கிடைக்க உள்ளது.

கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL விற்பனைக்கு அறிமுகம்

கூகுள் பிக்சல் 2 வரிசை விலை பட்டியல் (இந்தியா)

கூகுள் பிக்சல் 2 விலை – ரூ.61,000 (64GB)

கூகுள் பிக்சல் 2 விலை – ரூ.71,000 (128GB)

கூகுள் பிக்சல் 2 XL விலை – ரூ.73,000 (64GB)

கூகுள் பிக்சல் 2 XL விலை – ரூ.82,000 (128GB)

கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவில் அக்டோபர் 26ந் தேதி முன்பதிவு தொடங்கப்பட உள்ள இரு மொபைல் போன் மாடல்களும் நவம்பர் 1ந் தேதி முதல் டெலிவரி தொடங்கப்பட உள்ளது.

கூகுள் பிக்சல் 2, பிக்சல் 2 XL விற்பனைக்கு அறிமுகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here