புதிய கூகிள் பிக்சல்  3 & கூகிள் பிக்சல் 3 XL அறிமுகத்திற்கு முன்பு  கூகிள் பிக்சல் 2 XL விலை குறைப்பு

கூகிள் நிறுவனம், தனது தயாரிப்பான கூகிள் பிக்சல் 2 XL ஸ்மார்ட் போன்களின் விலையை குறைக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து வெளியான தகவலில், கூகிள் பிக்சல் 2 XL ஸ்மார்ட் போன்களின் ஸ்டாக்கை கிளியர் செய்யும் நோக்கில், அதன் விலையை குறைக்க கூகிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிக்சல் 2 XL ஸ்மார்ட் போன்களின் விலையில் 20 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. கூகிள் நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பிக்சல் 2 XL ஸ்மார்ட் போன்களை, 73,000 ரூபாய் விலையில் அறிமுகம் செய்தது.

தற்போது இந்த ஸ்மார்ட் போன்கள் 45,499 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை இந்த போன் அறிமுகம் செய்யபபட்ட போது இருந்த விலையை ஒப்பிடும் போது 40 சதவிகித குறைவாகும். இந்த விலை குறிப்பு மும்பையை மையமாக கொண்ட ரீடெய்ல் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.

புதிய கூகிள் பிக்சல்  3 & கூகிள் பிக்சல் 3 XL அறிமுகத்திற்கு முன்பு  கூகிள் பிக்சல் 2 XL விலை குறைப்பு
பிக்சல் 2 போன் வகைகள் பிளிப்கார்ட் வழியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருந்தபோதும், இந்த விலை குறைப்பு குறித்த விபரங்கள் இன்னும் பிளிப்கார்ட் இணையதளத்தில் அப்டேட் செய்யப்படவில்லை.

பிக்சல் 2 XL ஸ்மார்ட் போன்கள், 6 இன்ச் குவாட் HD+ P-OLED டிஸ்பிளே உடன் 18:9 அங்குல கொண்ட ஸ்கிரினை கொண்டது. இந்த ஸ்கிரீன் 2880 X 1440 பிக்சல்களாக இருக்கும். இந்த ஸ்மார்ட் போன்கள் கோல்கம் ஸ்நாப்டிராகன் 835 SoC-களுடன் 4GB ரேம் மற்றும் 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

புதிய கூகிள் பிக்சல்  3 & கூகிள் பிக்சல் 3 XL அறிமுகத்திற்கு முன்பு  கூகிள் பிக்சல் 2 XL விலை குறைப்பு

இந்த போனில் கூகிள் பிக்சல் 2 XL ஸ்மார்ட்போன்களின் 8MP ஷட்டர்களுடன் f/1.8 அப்பச்சர் மற்றும் டூயல் ஆட்டோபோகஸ்களுடன் OIS-ஐ கொண்டுள்ளது. தற்போது பிக்சல் 2 டிவைஸ்கள் ஆண்டிராய்டு 9 பை அப்டேட்களுடன் பின்புறமாக பிங்கர்பிரிண்ட் சென்சார்கள் மற்றும் 3,520mAh பேட்டரியை கொண்டுள்ளது.

கூகிள் நிறுவனத்தின் பிக்சல் 3 ஸ்மார்ட்போன் உலகளவிலான அறிமுகம் வரும் அக்டோபர் 9 தேதி நடக்க உள்ளது. இதுகுறித்து முழு விபரம் இந்த ஸ்மார்ட் போன்கள் அறிமுகம் செய்யும் நாளில் கூகிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.