இந்தியாவில் விற்பனைக்கு வந்தது கூகிள் பிக்சல் 3, கூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்கள்

கூகிள் பிக்சல் 3, கூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன்களை பிளிக்கார்ட் இணையதளத்தில் வாங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்கள் கிளியர்லி ஒயிட், ஜெஸ்ட் பிளாக் மற்றும் நாட் பிங்க் கலர் ஆப்சன்களில் கிடைக்கும். கூடுதலாக, இந்த ஸ்மார்ட்போன்களை வரும் 7ம் தேதிக்குள் குறிப்பிட்ட ஆப்லைன் ஸ்டோர்களில் பிக்சல் அல்லது நெக்சஸ் ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய போன் வாங்குபவர்களுக்கு கூகிள் ஹோம் மினி இலவசமாக கிடைக்கும்.

கூகிள் பிக்சல் 3, கூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்கள், கோல்காம் நிறுவனத்தின் ஸ்நாப்டிராகன் 845 SoC, 4GB ரேம், டூயல் செல்பி கேமரா மற்றும் மேட் கிளாக் பிளாக் பினிஷ் கொண்டிருக்கும்.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது கூகிள் பிக்சல் 3, கூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்கள்

ஆப்லைன் எக்ஸ்சேஞ்ச் ஆப்பர்கள் குறித்த தகவல்களை மும்பையை அடிப்படையாக கொண்ட மகேஷ் டெலிகாம் ரீடெயிலர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த ஆப்பர் நாட்டில் உள்ள அனைத்து ஆப்லைன் ரீடெயில் ஸ்டோர்களிலும் கிடைக்கும். ஒருவேளை கூகிள் ஹோம் மினி ஸ்டாக் இல்லை என்றால், அந்த ரீடெயிலர் ஸ்டாக் பெற்றவுடன் அளிப்பார்கள்.

இதுமட்டுமின்றி கூகிள் பிக்சல் 3, கூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்களை ரிலையன்ஸ் டிஜிட்டல், க்ரோமா, பூர்வீகா, பஜாஜ் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் விஜய் சேல்ஸ் ஆப் லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது கூகிள் பிக்சல் 3, கூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்கள்

கூகிள் பிக்சல் 3, கூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்களின் விலை

64GB ஸ்டோரேஜ் கொண்ட கூகிள் பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள் 71,000 ரூபாய் விலையிலும், 128GB கொண்ட கூகிள் பிக்சல் 3 ஸ்மார்ட்போன்கள் 80 ஆயிரம் ரூபாய் விலையிலும் கிடைக்கும்.

64 GB ஸ்டோரேஜ் கொண்ட கூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்கள் 83,000 ரூபாய் விலையிலும், 128 GB ஸ்டோரேஜ் கொண்ட கூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்கள் 92,000 ரூபாய் விலையிலும் கிடைக்கும்.