கூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3430mAh பேட்டரி  ஆகியவற்றுடன் வெளி வருகிறது

கூகிள் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்கள் அடுத்த சில மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3430mAh பேட்டரி ஆகியவற்றுடன் வெளி வரும் என்று தெரிய வந்துள்ளது.

கூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3430mAh பேட்டரி  ஆகியவற்றுடன் வெளி வருகிறது

சமீபத்தில் ரஷ்யாவை சேர்ந்த பிளாக்கர் ஒருவர், கூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் புகைப்ப்டங்கை லீக் செய்திருந்த நிலையில், இந்த டிசைன் ஆண்டிராட்டு 9 பை சாப்ட்வேருடன் வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தார். இரண்டு டோன் டிசைன் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் பிக்சல் அடர்த்தி 1440×2960 மற்றும் 493ppi கொண்டதாக இருக்கும் என்றும், போன் 6.7 இன்ச் டிஸ்ப்ளே உடன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த பிளாக்கர் வெளியிட்ட வீடியோவில் காட்டப்ப்பட்ட போன் ரிலிஸ் செய்வதற்கு முந்தைய வெர்சன் போன் என்றும், விரைவில் வெளியாக உள்ள கூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மறுசீரமைப்பு செய்ததாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3430mAh பேட்டரி  ஆகியவற்றுடன் வெளி வருகிறது

இந்த போனின் ஸ்பெசிபிகேஷன், ஸ்நாப்டிராகன் 845 சிப்செட், 4சிபி ரேம் அல்லது 64சிபி ஸ்டோரேஜ் மற்றும் 3430 mAH பேட்டரியை கொண்டுள்ளது. கேமிராவை பொருத்தவரை 12 MP சென்சார் மற்றும் பிராண்ட் செல்பி காமிரா 8 MP -ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியிடு வரும் அக்டோபரில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.