இணைய ஜாம்பவான் கூகிள் நிறுவனத்தின், பிக்சல் வரிசை மொபைலில் இடம்பெற உள்ள கூகிள் பிக்சல் 3a மற்றும் கூகிள் பிக்சல் 3a XL போன் கனடா விலை சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து அதிகார்வப்பூர்வ ரென்டரிங் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
இந்த வருடம் நடைபெற உள்ள 2019 Google I/O அரங்கில் புதிய ஆண்ட்ராய்டு ஓஎஸ் பதிப்பு உட்பட பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் மேம்பாடுகளுடன் பிக்சல் வரிசை போன்களும் வெளியாக உள்ளது.
கூகிள் பிக்சல் 3a, கூகிள் பிக்சல் 3a XL
பல்வேறு முன்னணி தளங்களில் கசிந்துள்ள விபரங்களின் படி, கூகிள் பிக்சல் 3a போன் விலை CAD 649 (இந்திய மதிப்பில் 33,900), கூகிள் பிக்சல் 3a XL விலை CAD 799 ( இந்திய மதிப்பில் ரூ. 41,600) என நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.
தற்போது வெளியாகியுள்ள அதிகார்வப்பூர்வமான ரென்டரிங் படங்களின் மூலம், இந்த போனில் நாட்ச் தன்மை கொண்ட முழுமையான டிஸ்பிளே வழங்கப்படவில்லை. இந்த போனில் “Tuesday, May 7” என அறிமுக தேதி குறிக்கப்பட்டுள்ளது.
3.5 மிமீ ஆடியோ ஜாக், யூஎஸ்பி டைப் சி போர்ட், மைக்ரோ யூஎஸ்பி போர்ட் உள்ளிட்ட அம்சங்களை இந்த போன்கள் கொண்டிருக்கும் என கருதப்படுகின்றது.