சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய Google Pixel 4a ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்புகளுடன் 6GB ரேம் உடன் 128GB சேமிப்பு கொண்டதாக இந்திய சந்தையில் அனேகமாக ரூ.26,000 விலையில் விற்பனைக்கு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. ஃபிளிப்கார்ட் மூலமாக விற்பனை செய்யப்பட உள்ளது.
முன்பாக விற்பனை செய்யப்பட்ட பிக்சல் 3a வெற்றியை தொடர்ந்து தற்போது வந்துள்ள பிக்சல் 4a மாடல் 5.81 அங்குல முழு எச்டி + ஓஎல்இடி டிஸ்ப்ளே 19.5: 9 விகிதத்துடன், மற்றும் எச்டிஆர் ஆதரவினை கொண்டதாகவும் நவீனத்துவமான பஞ்ச் ஹோல் டிசைன் பெற்றதாக விளங்குகின்றது.
குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 730G சிப்செட் கொண்டு இயக்கப்பட்டு 6GB ரேம் உடன் 128GB சேமிப்பினை பெற்ற ஒரு நாள் முழுமைக்கும் தாக்குப் பிடிக்கும் வகையிலான 3,140mAh பேட்டரி கொடுக்கப்பட்டு 18 வாட்ஸ் விரைவு சார்ஜருடன் இணைந்துள்ளது.
கூகுள் பிக்சல் 4ஏ கேமரா ஆப்ஷனை பொறுத்தவரை, 12.2 மெகாபிக்சல் எஃப் / 1.7 இரட்டை பிக்சல் ஆதரவுடன் கூடிய கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஆப்டிக்கல் பட உறுதிப்படுத்தல் (OIS), எலக்ட்ரானிக் பட உறுதிப்படுத்தல் (EIS) மற்றும் 77 டிகிரி கோண பார்வைக்கான ஆதரவை வழங்குகின்றது. முன்பக்கத்தில், எஃப் / 2.0 துளை கொண்ட 8 மெகாபிக்சல் செல்ஃபி மற்றும் வீடியோ கேமராவும், 84 டிகிரி கோண பார்வையும் உள்ளது.
பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனில் 1080p வீடியோவை 30, 60 அல்லது 120fps முறையில் வீடியோவை பதிவு செய்யலாம், 30, 60, அல்லது 240fps இல் 720p வீடியோக்களையும் மற்றும் 30fps முறையில் 4K வீடியோக்களை பதிவு செய்யலாம். நேரடி HDR +, இரட்டை வெளிப்பாடு கட்டுப்பாடுகள், இரவு பார்வை மற்றும் உருவப்படம் பயன்முறை போன்றவற்றையும் கொண்டுள்ளது.
கூடுதல் விருப்பங்களில் 4G VoLTE, வை-ஃபை 802.11ac 2x2MIMO (2.4 / 5 GHz), ப்ளூடூத் 5.1 LE, ஜிபிஎஸ், யூஎஸ்பி Type-C Gen 1, NFC போன்றவற்றை பெற்றுள்ளது.
web title : Google pixel 4a India launch on october 17